வி.களத்தூர் மார்ச் 28 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு ! நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை அறிவிப்பு!
வி.களத்தூர் மார்ச் 28 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு ! நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை அறிவிப்பு!
இதுக்குறித்து நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை தலைவர் ஜலால்லுதீன் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காவிரியின் உபரிநீரை தேக்கும் வகையில் காவிரியின் நடுவே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்ட திட்டமிட்டு அதற்காக நதிநிலை அறிக்கையில் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
கர்நாடக அரசின் இத்தகு அடாத செயலுக்கு எதிராக விவசாயிகள் முயற்சியில் மார்ச் 28ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தினை நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை வரவேற்பதோடு, இப்போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
இம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முழு ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதோடு, முழு அடைப்பு போராட்டம் வெற்றியடைய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
