naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

28 Dec 2015

கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்: சீமான் அறிவித்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உருசு மைதானத்தில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன்  அப்துல்ரவூப்  நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–



படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். அரசியலில் மாற்று புரட்சி வரவேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். தீய ஆட்சிமுறை ஒழிந்து தூய ஆட்சி முறை வரவேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கும் வாக்கு நாளை தலைமுறைக்கு வழிவகுக்கும். வரலாற்றில் பெரிய மாற்றம் வரவேண்டும். இதுவரை செய்யாததையா இனிமேல் தி.மு.க.–அ.தி.மு.க.வினர் செய்யப் போகிறார்கள்.
ஏரிகளை முறையாக தூர்வாரி இருந்தால் வெள்ள சேதம் ஏற்பட்டிருக்காது. தமிழர்கள் சொந்த நிலத்தில் வாழ வழி செய்ய வேண்டும். தமிழில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் களை சீமான் அறிவித்தார்.

கரூர் செல்வநன்மாறன்
அரவக்குறிச்சி – குருசாமி,
கிருஷ்ணராயபுரம் தவமணி பத்மநாபன், 
குளித்தலை– சீனி.பிரகாசம்.








24 Dec 2015

ஜல்லிக்கட்டு தடை: தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் திட்டமிட்ட சதி - சீமான்

ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்துச் சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. அதனால், இவ்வாண்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு தடைவிதித்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழனின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு நிலைநாட்டுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். சீமான் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு துணியில் சல்லிக்காசுகளைக் கட்டித் தொங்கவிட்டு, மாட்டை அடக்குவோருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என விளையாடப்பட்டதால் இது ‘ஜல்லிக்கட்டு'எனப்பட்டது. நம் முன்னோர்களால் ஏறு தழுவுதல் என்று விளையாடப்பட்ட இவ்விளையாட்டு பெயர் மருவி இன்று ‘ஜல்லிக்கட்டு' எனப்படுகிறது. உலகத்தில் எந்த இன மக்களும் மாடுகளுக்கு எனப் பண்டிகை வைத்துக் கொண்டாடியதில்லை.
ஆனால், தமிழர்கள்தான் உழவுக்கு உதவி செய்ததற்காக நன்றிப்பெருக்கோடு மாட்டுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்த மாட்டோடு கட்டித்தழுவி விளையாடும் வீரம்செறிந்த விளையாட்டுதான் இது. காரணத்தோடே எப்போதும் பெயரிடும் பழக்கமுடையத் தமிழர்கள் அதனாலேயே இதற்கு ‘ஏறு தழுவுதல்' என்று பெயரிட்டார்கள்.
இது எதுவோ காலப்போக்கில் காட்டுமிராண்டித்தனமாக தோன்றிய விளையாட்டு அல்ல! காதலையும், வீரத்தையும் பின்னிப்பிணைத்து தமிழர்களின் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் ஆதியில் விளையாட்டாகும்.
பழங்காலத்தில் மாட்டை அடக்குவோருக்கே தங்கள் பெண்ணை நம் முன்னோர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். இப்படி, தமிழர்களின் வாழ்வியலைச் சொல்லும் ஏறு தழுவுதலானது, சங்கக்காலத்திலேயே இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. மிக மூத்த நாகரீகம் எனச் சொல்லப்படும் சிந்துசமவெளி நாகரீகத்தில்கூட ‘ஏறு தழுவுதல்' தொடர்பான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டோடும், வாழ்வியலோடும் தொடர்புடைய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும்.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, ஆரத்தழுவி நேசித்து ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்ற பண்பாட்டைக் கொண்டு, பன்னெடுங்காலமாக அரிசி மாவில் கோலமிட்டு ஈ, எறும்புக்குக்கூட இரையிட்டவர்கள் தமிழர்கள் அப்படி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பேரன்பையும், பெருங்குணத்தையும் உடைய உயிர்நேயர்களான தமிழர்களா ஒரு உயிரை வதைத்து அதில் இன்பம் காண்கிறார்கள்? அதனால், தமிழர்கள் மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என்பதே முற்றிலும் தவறானக் கூற்று. ஜல்லிக்கட்டு என்பது ஆதிமனிதனான தமிழன் மாட்டை உழவுக்குப் பழக்கிய உறவைச்சொல்லும் விளையாட்டு.
அதனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்துச் சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. அதனால், இவ்வாண்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு தடைவிதித்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழனின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு நிலைநாட்டுவோம். இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

18 Dec 2015

மகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் - சீமான் அறிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் தலைநகர் சென்னையையும், கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மாநிதநேயம் கொண்ட தனிநபர்களும், மனிதநேயமிக்கக் கட்சிகளும், தன்னலம் பாராத சிறு சிறு அமைப்புகளும் மக்களின் துயரில் பங்கேற்று அவர்களுக்கு உதவி செய்து ஆறுதலாக இருந்து வந்தாலும் மக்கள் அடைந்துள்ள துயரங்களுக்கு, இழந்த இழப்புகளுக்கு இது போதாது. மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகின்ற நிவாரணப்பணிகள் பெருங்கடலில் கலந்த சில துண்டு பெருங்காயங்களாய் இருக்கின்றன.

இயற்கைப் பேரிடரில் சிக்கி சின்னாபின்னமாய்ச் சிதைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்த மனதோடு கரம் கோர்த்து பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தற்போது எழுந்திருக்கிறது. மழை சற்றே ஓய்ந்த போதிலும் இன்னமும் சென்னை நகரத்து பல வீதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. தேங்கி இருக்கிற வெள்ள நீரோடு கழிவு நீரும் கலப்பதால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் முற்றிலுமாய் வீடு, பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். எனவே மக்களின் துயரினையும், இழப்பினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செய்து வருகிற நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களின் வசிப்பிடங்களுக்கே அரசு ஊழியர்கள் சென்று குடும்ப அட்டை, அரசு ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். 

மகளீர் சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்றுத் தற்போது அக்கடனை திருப்பி அடைக்க முடியாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் துயர் நிலையைக் கருத்தில் கொண்டு மகளீர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகத் தமிழக அரசு வழங்கி உள்ள கடன் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தைப் பொறுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற விவசாயக்கடனை தமிழக அரசு மக்களின் துயர் நிலை கருதி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளி நிறுவனங்களும் பள்ளிக் கட்டணங்களைப் பெருமளவுக் குறைத்துக் கொண்டு மக்களைத் துயர் இருட்டில் இருந்து காத்திட உதவிட வேண்டும். 

அரசு ஆவணம் ஏதாவது இருந்தால் மட்டுமே அரசு மூலம் கிடைக்கக்கூடிய நிவாரண உதவிகள் கிடைக்கிற ஒரு சூழல் சென்னையில் தற்போது நிலவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தளங்களில் வசித்து வந்தவர்கள், தாழ்வான நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பல குடும்பங்கள் வெள்ளத்தால் முழுவதுமாக முழ்கிப்போன வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் இழந்திருக்கிறார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்குண்டு பிழைத்த பலருக்கு எவ்வித அரசு ஆவணமும்,அடையாள ஆவணங்களும் இல்லாத நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு மக்களின் நிலை உணர்ந்து அரசு ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு உரிய நிவாரணங்கள், அரசு ஆவணங்களைப் புதிதாக உருவாக்கித் தருதல் ஆகிய உதவிகளை எவ்விதமான தடையுமின்றி வழங்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.

12 Dec 2015

தெருமுனைக்கூட்டம்- வி.களத்தூர்

பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி  மாவட்டம் சார்பாக 12-12-2015 இன்று வி.களத்தூர் கிராமத்தில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் ‪#‎மு‬.ஜலால்லுதீன் தலைமையில் நடைபெற்றது. 
இதில் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  ப. அருள்,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அருண்குமார் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ‪#‎இசை‬ சி.ச மதிவாணன் ,மகளிர் பாசறை செயலாளர் ‪#‎தமிழ்‬ நிசா, மாணவர் பாசறை செயலாளர் மு.ஜலால்லுதீன்,  நகர செயலாளர்  அஷரப், நகர துணை தலைவர்  ஈஸாக், அன்புமணி ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.











.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்