naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

31 Jul 2015

மதுவை ஒழிக்க தன்னுயிரை தியாகம் செய்தவர் அய்யா சசிபெருமாள் – செந்தமிழர் சீமான் உருக்கம்



உயிரையும் பொருட்படுத்தாமல் சாவை முன்னிறுத்தி அய்யா சசிபெருமாள் மது ஒழிப்பிற்காக போராடினார் என்று செந்தமிழர் சீமான் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் பல வழிகளில் மது ஒழிப்பிற்காக போராட்டத்தை முன்னிறுத்திய காந்தியவாதி அய்யா சசிபெருமாள் இன்று மக்களின் உயிரை குடிக்கும் மதுவை ஒழிக்க தன்னுயிரை கொடுத்துள்ளார் என்றும், இந்த ஒரு உயிரை நினைத்தாவது தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழர்களின் உயிரை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யாவின் உயிரிழப்பு மது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்த சீமான், இனியும் தமிழக அரசு மதுக்கடைகளை மூடாவிட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.

28 Jul 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு:
1) கடலூர் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் முள்வளைவு அமைத்திட வேண்டும்.
2) கடலூரில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி ரூ.5 இலட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
3)கடலூர் கெடிலம் ஆற்றின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் நாசப்படுத்தும் நெல்லிக்குப்பம் EID பாரி சர்க்கரை ஆளைக் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்.
4)பெரியப்பட்டில் சாய தொழிற்சாலையை நிறுவி விவசாய நிலத்தையும், நீர் வளத்தையும், கடல் வளத்தையும் கூட்டாக அழிக்கும் SIMA சாயத்தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும்
5)நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திருக்குளம், பனந்தோப்பு, ஆரோக்கியசாமி தெரு, ரகுமான் நகர் ஆகிய மக்கள் வசிக்கும் பகுதியின் நடுவில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை தடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.

21 Jul 2015

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..


தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.
அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?
கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?
யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?
தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.
.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?
இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?
எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?
தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)
சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.
கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???
தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?
மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?
seeman_2417919f
எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?
நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??
அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?
தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.
ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.
பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.
அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.
தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.
.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.
அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.
எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.
எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.
அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.
கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..
சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…
அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.
இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..
காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.
.யார் வலது சாரி, இடது சாரி என…
..மணி செந்தில்

17 Jul 2015

60 மேற்பட்ட மாணவிகள் கைது- சாராயக்கடையை நொருங்கிய நாம் தமிழர்

வேலூரில் பள்ளிக்கு அருகில் இருந்த அரசு மது கடையை மூட கோரி போராட்டம் நடத்திய 60 க்கும் மேற்பட்ட மாணவிகளை காவல் துறை கைது செய்ததை தொடர்ந்து, திருச்சியில் அகிம்சை போராட்டத்தை அரசு மதிக்காததால் பல பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடை நாம் தமிழர் கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது!!!
"குடித்த இளைஞர்களை பார்த்திருக்கிறோம்டாஸ்மாக்கை அடித்த இளைஞர்களை இப்போதுதான் பார்க்கிறோம்"உண்ணாவிரத போராட்டங்கள், முற்றுகை போராட்டங்கள், கண்ணீர் போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழக மக்கள் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடத்திவிட்டார்கள்.ஒரு போராட்டத்திற்குகூட தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. நீதிமன்றம் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட சொல்லியும் முழுமையாக அதை அரசு பின்பற்றவில்லை.

அதற்க்கான கொள்கையும் தமிழக அரசிடம் இல்லை. நீதிமன்றமோ சாராயம் விற்று மக்களை கொல்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு மக்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்று அறிவித்துவிட்டது. இனி என்ன தான் செய்வார்கள் மக்கள்?நாம் தமிழர் கட்சியினரை போல தமிழகமெங்கும் மக்கள் உருட்டுகட்டைகளைசாராய கடைகளுக்கு எதிராக எடுத்தால் தமிழக அரசு என்ன செய்யும்? .ஆனால் உருட்டு கட்டைகளை விட உங்கள் வாக்கு வலிமையானது. 

மதுவிலக்கு அறிவிக்காத கட்சிகளுக்கு எங்கள் வாக்கு இல்லை என்று மக்கள் உறுதி
ஏற்கவேண்டும். 2016 தேர்தல் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் தேர்தல்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியினர், இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் மதுபான கடைக்குச்சென்ற நாம் தமிழர் கட்சியினர் பணியிலிருந்த ஊழியர்களை வெளியேற்றினர். பின்னர் சவுக்கு கட்டைகளைக் கொண்டு, மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

15 Jul 2015

டாஸ்மாக் கடையை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்: பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் சேதம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியில் நாம் தமிழகர் கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அடித்து நொறுங்ககப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மார்க் எண் 10296 கடையின் பொறுப்பாளர் பிரகாஷ் உள்ளி்ட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டவர்கள், கடைக்கு வெளியே உள்ள நாகநாதர் டீக்கடையில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துவிட்டு டாஸ்மார்க் கடையில் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஷோக்கேஸ்சில் பாட்டில்களை அடித்து நொருக்கினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். முனியப்பன் (வயது 23), கோபி (23), பீரேம் ஆன்ந்த (23), சரவணன் (26), விஜய் (23), சிவா (22).

13 Jul 2015

வசதி குறைந்தோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மலேசிய நாம் தமிழர் இயக்கம்



மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் தலைமையில் வசதி குறைந்தோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வின் போது உரையாற்றிய அவர் , கிராமப்புறத்தில் புறாட்க்கள் போல் வாழ்ந்து வந்த தமிழர்கள் கூட்டதை , இன்று தலைநகரில் மலிவு அடுக்குமாடி வீட்டில் தங்கவைத்து சிறை கைதிகள் போல் இங்குள்ள மக்களின் வாழ்க்கை ஓடிகொண்டிருகிறது என்றார். தமிழர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் ஏழ்மையை ஒழிக்க , தமிழர்களுக்கான புதிய பொருளாதார திட்டத்தையும் தத்துவத்தையும் உருவாக்கி உள்ளதாக கலைமுகிலன் தெரிவித்தார். நாம் முதலில் ஏனோதானமான போக்கை கை விட்டு வாழ்ந்தால் , தமிழர்களும் உயரலாம் என்றார்.









வேலூரில் செவிலியர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதல் அரசப்பயங்கரவாதம் -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்

வேலூரில் இயங்கிவரும் தனியார் கல்லூரி மாணவிகள் மீது தடியடி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூர் பில்டர்பெட் சாலையில் தனியாருக்குச் சொந்தமான செவிலியர் கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதன் எதிரில் டாஸ்மாக் மதுபானக்கடையும் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு எதிரில் இருக்கும் இந்தக் கடையால் டாஸ்மாக் கடைக்கு வருவோர் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடப்பதும், வழியில் செல்வோருக்கு இடையூறு செய்வதும், கல்லூரியில் படிக்கும் பெண்களை கேலி செய்வதும், இரவு 12 மணிவரை தேவையற்ற சண்டை, சச்சரவுகள் நடப்பதுமாக இருந்து வந்தது. இதனால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் கிட்டவில்லை. இந்நிலையில் 11-06-15 அன்று செவிலியர் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, பொதுமக்களோடு இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அதற்கு பூட்டுபோடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது அங்குவந்த காவல்துறை அதிகாரிகள், ‘போராட்டத்தைக் கைவிடாவிட்டால் மாணவிகளைக் கைதுசெய்வோம்’ என எச்சரித்திருக்கிறார்கள். மாணவிகள் போராட்டத்தைத் தொடரவே மாணவிகள் மீது காவல்துறை தடியடியை நடத்தியிருக்கிறது. கோயில், பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் டாஸ்மாக் கடை இயங்கக்கூடாது என்பது அரசு விதி. ஆனால், அதனையும், மீறி இந்தக் கடை இயங்கிவருகிறது. இப்படி விதிமுறைகளுக்கு மாறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சனநாயக முறையில் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவியது சகித்துக்கொள்ளவே முடியாத அட்டூழியம். இது சனநாயகத்துக்கு எதிரான அரசப் பயங்கரவாதம்.
அண்டை மாநிலமான கேரளாவில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ‘மதுக்கடைகளின் மூலம் வரும் வருமானத்தைவிட எம் மக்களின் நலன்தான் முக்கியம்’ என அறிவித்து, மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் பால்முகம் மாறாத பிஞ்சுக்குழந்தைகள்கூட குடிக்கு அடிமையாக மாறிவரும் சூழலிலும் அரசு மதுபானக்கடைகளை நடத்தி, அதற்கு எதிராகப் போராடுபவர்களையும் தாக்குகிறதென்றால் அரசு யாருக்கானது? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதனால், மக்களின் நலன், இளைய தலைமுறைப் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழகம் முழுக்க இருக்கிற டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்குமுன், முதல்படியாக தமிழகம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு இதுகாறும் அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தச் சம்பவத்தில் மாணவிகள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசு செய்யத்தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மக்களைத்திரட்டி மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11 Jul 2015

பெரம்பலூர் மாவட்ட மாணவர் பாசறை சார்பாக கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர் மாவட்ட மாணவர் பாசறை சார்பாக கையெழுத்து இயக்கம் .

பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரியில் இலங்கை அரசினை சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐக்கியநாடுகள் சபையினை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கையெழுத்து இயக்கம்..நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் தொடங்கி வைக்க,
மாணவர் உறவுகள் எழுச்சியுடன் நடத்தினர்..





வாக்களிப்பதற்கு செய்யவேண்டியது...
கீழுள்ள முகவரியை அழுத்தவும்...
http://www.tgte-icc.org/
அல்லது
http://www.tgte-icc.org/tamil.asp
காணொளி விளக்கம்
http://youtu.be/CKjb_NlHQ70

9 Jul 2015

சீமானின் கருத்தடலால் சிதறிய தி.மு.க காங்கிரஸ் நிர்வாகிகள்

சீமானின் கருத்தடலால் சிதறிய தி.மு.க காங்கிரஸ் நிர்வாகிகள் 




கேள்வி-ஜெயலலிதா உங்களை சிறையில் போட்டு விடுவார் என்று பயப்படுறீங்க தானே சீமான்-திமுக பேச்சாளர். 

பதில் - இந்த நிகழ்ச்சியின் வழியாக நான் ஒண்ணு கேட்டு கொள்கிறேன். ஜெயலலிதா கிட்ட சொல்லி என்னை தயவு செய்து சிறையில் போட சொல்லுங்க. நானா வேண்டாங்கிறேன் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சீமான் வீராவேசம் . 07.07.2015

முழு காணொளி




4 Jul 2015

1 மில்லியன் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு



அன்பிற்கினிய ஊடக நண்பர்களுக்கு..
தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக முடிவில்லா சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள்சிறைவாசிகளை அரசு பொது மன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும்,சிறப்பு முகாம்களை இழுத்து மூடு தமிழீழ அகதிகளை அவர்கள் குடும்பத்துடன் வாழ விடு என்ற கோரிக்கைகளை முன் வைத்து எதிர் வரும் ஜீலை 11ம் தேதி சென்னை, மதுரை, திருச்சி,வேலூர், கோவை ஆகிய சிறை முற்றுகை அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போராட்டம் குறித்தும்…
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்த குற்றவாளிகளை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து பெரும் முயற்சி உலகம் முழுக்க நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் உடனடியாக அனைத்து தமிழர்களும் அதில் பங்கேற்று கையெழுத்திட்டு இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு நீதி பெற ஐநா மன்றத்தை வலியுறுத்தக்கோரியும்..
பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (03-07-2015) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் ஊடகத்துறையை சேர்ந்த நீங்கள் கலந்துக்கொண்டு செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்பவர்கள்
செந்தமிழன் சீமான் – தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
K.K.S.M. தெகலான் பாக்கவி – SDPI மாநில தலைவர்
S.S. ஹாரூன் ரசீத் – இணைப் பொதுச்செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி
கே.எம்.சரீப் – தலைவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
சே.ஜெ.உமர்கயான் – இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்

ஐ.நாவை நோக்கிய கையெழுத்து இயக்கத்தினை வலுவூட்டுவோம் : செந்தமிழன் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் அறைகூவல்!

உலகப்பரப்பெங்கும் தமிழர்களால் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு வலுவூட்டி நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் சமூக அரசியல் பிரமுகர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.



எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இக்கையெழுத்து இயக்கம் ஐ.நாவைக் கோருகின்றது.
https://youtu.be/Ink7wzxC_P4
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கம் ஐந்து இலட்சத்தினை எட்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் இச்செயற்பாட்டினை இன்னும் வீரியப்படுத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களது தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (03-07-2015) மாலை 3 மணிக்கு நடைபெற்ற இச்சந்திப்பில் செந்தமிழன் சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி), K.K.S.M. தெகலான் பாக்கவி ( SDPI மாநில தலைவர்), S.S. ஹாரூன் ரசீத் (இணைப் பொதுச்செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி), கே.எம்.சரீப் (தலைவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி), சே.ஜெ.உமர்கயான் (இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்) ஆகிய பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.

3 Jul 2015

பத்தாண்டு சிறைவாசிகளின் விடுதலைகோரி சிறை முற்றுகைப்போராட்டம்-சீமான் அறிவிப்பு

தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலைசெய்யக்கோரியும், சிறப்பு முகாம்கள் எனும் வதைமுகாம்களை மூடக்கோரியும் 11-06-15 அன்று புழல், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட சிறைகளை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவிருக்கிறது என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என ஐ.நா.வை. வலியுறுத்த www.tgte-icc.org எனும் தளத்தில் ஒவ்வொரு தமிழரும் வாக்குசெலுத்த வேண்டும் எனவும் சீமான் கேட்டுக்கொண்டார்.

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்

அனைத்து செய்திகளும்..