யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.
நண்பகல் 12.45 மணியளவில் பொதுச்சடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும் தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.
சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது.
மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக் கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழம் இசைக்குழுவினரால் மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என் பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிட முடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது.
மண்டப மேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
தொடர்ந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடர வேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப் போவதில்லை என்பதையம் வலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.
தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள், எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டிய நாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் உறுதி கூறப்பட்டது.
இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்து கொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப் பாராட்டினர்.
அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெற வேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
புலம்பெயர் நாடுகளிலும், இந்தியாவிலும், தாயகத்திலும் உள்ள மக்கள் வீர மறவர்களை நினைவு கூர்ந்தனர்.

சென்னை: 

இப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்..jpg)
சுதந்திரப் போராட்டம், சாதியப் பிரச்னைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி சமகாலப் பிரச்னையான மணல் கொள்ளை எதிர்ப்பு வரை தொடர்ச்சியாகப் போராடிவருபவர் நல்லகண்ணு. தேர்தல் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் எந்த மக்களுக்காகப் போராடுகிறாரோ அந்த மக்களாலேயே தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்படுகிறார் நல்லகண்ணு இந்த மக்களுக்காகச் செய்யாத எந்த ஒன்றை, ரஜினி அரசியலுக்கு வந்து செய்யப்போகிறார்? ‘நல்லகண்ணு வெற்றிபெற வேண்டும்’ என்று குரல்கள் எழாதபோது, ‘ரஜினி முதல்வராக வேண்டும்’ என்று குரல்கள் எழுவதன் அவசியம் என்ன?
காலத்தில் மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்க்கப்பட்ட விஜயகாந்த், இன்று கேலிக்குரியவராகப் பார்க்கப்படுகிறார். யூடியூபில் ‘விஜயகாந்த்’ என்று டைப் செய்தால், நூற்றுக்கணக்கான காமெடி வீடியோக்கள் கொட்டுகின்றன. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாரே தவிர, மேலே சொன்ன தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் குறித்து அவருக்குக் கருத்தோ தீர்வோ எதுவும் கிடையாது. விஜயகாந்தைவிட இந்த விஷயத்தில் ரஜினி சிறந்தவர் என்று சொல்வதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவை எடுத்துக்கொள்வோம். இங்கே ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், அங்கே சிரஞ்சீவி மெகா ஸ்டார். ஆனால் அவரால் அரசியலில் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாதா என்ன? விஜயகாந்தையும் சிரஞ்சீவியையும் பார்த்தபிறகும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் அவர் ரசிகர்கள் நம்பினால், மற்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள், ரஜினி தன் ரசிகர்களையே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம்.