naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

23 Nov 2014

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்) 23ஆம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கடந்த 22ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்போது, நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அனைத்து கட்சியினருக்கும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்த கூட்டத் தொடரின்போது, பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் 67 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. இதில், 59 மசோதாக்கள் மாநிலங்களவையிலும், 8 மசோதாக்கள் மக்களவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், மக்களவையில் பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. அரசுக்கு, மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லை. இதனால், எதிர்க்கட்சிகளின் உதவியுடன்தான் மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்

அனைத்து செய்திகளும்..