naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

23 Nov 2014

கொளத்தூர் பகுதியின் குருதிகொடை முகாம்..

ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் சிறார்களின் களப்பணியுடன் ஆரம்பிக்கப்பட்டது கொளத்தூர் பகுதியின் குருதிகொடை முகாம்..
தேசியத்தலைவரின் பிறந்தநாளை கொண்டாட அறிமுகமே இல்லாத சிறார்கள் எங்களை ஓரமாக இருக்க சொல்லிவிட்டு மருத்துவத்தில் கை தேர்ந்தவர்கள் போல மருத்துவர்களுக்கு அனைத்து உதவியை செய்வது முதல் இருக்கைகள் போடுவது வரை ஆர்வத்துடன் வேலை செய்ததே கொளத்தூர் பகுதியின் குருதிகொடை சாதித்ததற்க்கான தனித்துவத்தை காட்டுகிறது..
சுமார் 5 மணி நேரங்களில் 200 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்ட குருதிக்கொடையில் மருத்துவ சோதனைக்கு பிறகு சுமார் 120+ நபர்கள் குருதிகொடை வழங்கி விழாவை வெற்றி பெற செய்தார்கள்.. 70 வயதிற்கும் மேற்பட்ட மூதாட்டி ஒருவர் "எனது ரத்தத்தையும் எடுத்து கொள்ளுங்கள்" என அடம்பிடித்து நிகழ்ச்சியை சில நிமிடங்கள் நெகிழவைத்து விட்டார்.. மூதாட்டியால் கொடுக்க முடியாது என சிரமப்பட்டு சமாதானபடுத்தியாகிவிட்டது..
மாவட்ட செயலாளர் ரா.ரவிக்குமார் தலைமையில் கொளத்தூர் கென்னடி சதுக்கம் "பாலாஜி மெட்ரிகுலேசன் பள்ளியில்" நடைபெற்ற முகாமில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு கடின உழைப்பை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.. நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் அமீது தொடங்கி வைத்தார்...
ஓவ்வொரு போராளிகளின் உழைப்பும் இதில் செதுக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் பெயர்பட்டியல் நீண்டு செல்லும், ஆகையால் அனைவரையும் படத்தில் காணலாம்... உழைப்பை செலுத்திய நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும், ஒத்துழைத்த காவல் துறைக்கும், கொளத்தூர் பொதுமக்களுக்கும், மாற்று மொழி நண்பர்களுக்கும், பல்வேறு விதங்களில் முன்வந்து தங்கள் உதவியை செய்த உறவுகளுக்கும் நன்றிகள் கோடி...









தலைமை  : மாவட்ட செயலாளர் ரா.ரவிக்குமார்.
தொடங்கி வைத்தார் : மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் அமீது.
இடம்  : கொளத்தூர் கென்னடி சதுக்கம் "பாலாஜி மெட்ரிகுலேசன் பள்ளி"

0 கருத்துகள்:

Post a Comment

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்

அனைத்து செய்திகளும்..