தமிழகத்தின் பல்வேறு இடங்களில், குருதி கொடை முகாம் நடத்தி, நாம் தமிழர் கட்சியினர் கொண்டாட்டம்!!
மாவீரன் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற குருதி கொடை வழங்கும் முகாமை, தமிழன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரும், நாம் தமி;ழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான கா.கலைக்கோட்டுதயம் துவக்கி வைத்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் நாம் தமிழர் கட்சியின் குருதிகொடை வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலவர் புகழ்ராசு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, நாம் தமி;ழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மீசா.பெரியார்அன்பன், மாவட்ட இணை செயலாளர் மீசை முருகேசன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தம்பி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.
இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சமூகநலக்கூடம் அருகில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, குருதி கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை இராவணன் துவக்கி வைத்தார். இதில் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனரும், நாம் தமி;ழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான கா.கலைக்கோட்டுதயம், மாவட்ட தலைவர் சோமநாதன், துணைத் தலைவர் ரத்தினகுமார், பொருளாளர் துரைரமேஷ், துணை செயலாளர் இராமசந்திரன், மாவட்ட இணை செயலாளர் சுதாகரன், சைதை கிழக்குப்பகுதி தலைவர் ஆனந்தன், மனோகரன், பெருமாள், சுரேஷ், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை : மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலவர் புகழ்ராசு
சிறப்பு அழைப்பாளராக : நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான கா.கலைக்கோட்டுதயம்

0 கருத்துகள்:
Post a Comment