naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

17 Oct 2015

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள். – செந்தமிழன் சீமான் அறிக்கை.

நடிகர் சங்க விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த நடிகர் சங்கத்தில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளீட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த பெருமைகள் பலவைந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும்,ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த ,பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட,தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல. தமிழினத்தின் பெருமை மிகு கலை அடையாளமான அய்யா நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார். எனவே, இச்சங்கம் இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றிருப்பது சரியானதல்ல. தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ்நாடு நடிகர் சங்கம் “ என பெயர் மாற்றம் அடைவது தான் மிகச் சரியானதாக இருக்கும்.
மேலும் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ள இச்சங்க தேர்தல் தொடர்பான எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள் பேசித் தீர்த்திருக்க வேண்டியவை. ஆனால், காலம் கடந்து விட்டது. 
தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையில்,முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கு தலைமை தாங்கலாம் என்கிற நிலை இவ்வினத்தின் தன்மானத்திற்கு இழுக்கு. உலகிலேயே தன்மானத்திற்கு இயக்கம் தொடங்கிய தமிழினம் இன்று தனக்கு தலைமையேற்க யார் யாரையோ எதிர்பார்த்து நிற்பது அவமானம். ஒரு இனத்தின் தன்மதிப்பு என்பது அவர்களே அவர்களது இனத்திற்கு, நிலத்திற்கு தலைமை ஏற்பதாகும் இல்லையேல் அது அடிமைத்தனத்திற்குத்தான் அடித்தளமிடும். இது இனவாதமோ பாசிசமோ அல்ல. 
பிற மாநிலங்களில் செயல்படுகிற திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர்கள் யாராவது அச்சங்கத்தில் தலைமையையோ முக்கிய பொறுப்புகளையோ ஏற்க முடியுமா?,அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதை இச்சமயத்தில் ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
‘தகப்பன் என்பவன் பெத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் ரத்தவனாக இருக்கவேண்டும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் யாரும் வரலாம், வாழலாம், நடிக்கலாம் ஆனால் வழிநடத்தும் தலைமை தமிழர்களாக இருத்தல் வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தகாரர்களான நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்து நாட்டிற்கு மட்டுமல்ல நடிகர் சங்கத்திற்கும் பொருந்தும் என்பதை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்கிற உணர்வு சார்ந்த எமது கோரிக்கையை எமது கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3 Oct 2015

சிறப்பு முகாம் என்ற சித்தரவதை முகாம்களை உடனடியாக மூடுக. அடைத்துவைக்கபட்டிருக்கும் ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்க – சீமான் அறிக்கை

 


சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது. பெயர் தான் சிறப்பு முகாம் சிறைச் சாலைகளுக்கு உள்ளேயே நடத்தப்படும் இம்முகாம்கள் சிறைச்சாலைகளை விட கொடுமையான சித்தரவதை முகாம்களாக தான் செயல்பட்டு வருகிறது. திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 9 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்து 3 வருடங்களாக சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் அகதியாக பதிவு செய்து தங்கியிருந்த இவரை எவ்வித நியாயமான காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காவல்துறை கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. இடுப்பின் கீழ் இயங்காது படுத்த படுக்கையாக இருப்பவர் சுரேஷ்குமார். தனித்து இயங்கமுடியா நிலையில் இவரது அன்றாட தேவைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்காக ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பலமுறை மனுக்கள் அளித்தும் அரசு சம்மதிக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி உதவிக்கு முறையிட்டு அனுமதி பெற்றபின்னரும் அரசு அனுமதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக ஈழ உறவுகள் தான் இவருக்குரிய அன்றாட தேவைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாருக்கு உதவி வந்த சக ஈழ உறவுளான நா.பகீதரன், பா.சிவனேஸ்வரன், த.மகேஸ்வரன், க. மகேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி, க.ராஜேந்திரன், ச.சுபாஷ், க.உதயதாஸ்,செ.யுகப்பிரியன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 01.10.2015 முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அதனால் தற்போது சுரேஷ்குமாருக்கு, உதவ யாரும் இல்லாமல் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்காலிகமாகவேனும் ஒருவரை தன் உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது அவருக்கு, பதில் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கும் விடவுமில்லை. இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் மீது காவல்துறை கொலை மிரட்டல், தற்கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை. அநீதியான இக்கைது நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல வருடங்களாக குடும்பங்களை விட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்று நீதிமன்றங்களால் விடுவித்த பின்னரும் தங்களை விடுதலை செய்யாமல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து பல முறை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளீட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்க விரும்பாமல் அரசு அவர்களை பல ஆண்டுகளாக எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் நியாயமான காரணங்கள் இன்றி தடுத்து வைத்துள்ளது. தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் சிறையில் அடையுங்கள், இல்லையெனில் எங்களை எங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.

சிறப்பு முகாம்களில் வதைபடும் நம் ஈழ உறவுகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விடுதலை செய்வதாக போலி வாக்குறுதிகள் அளிக்கின்றனர் ஆனால் உண்ணாவிரதம் கைவிடப்பட்ட பின்னர் அவர்களை விடுவிக்க மறுத்து சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கின்றனர். இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்பதை எடுத்துக்கூறி சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் பல தமிழ் அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் இவ்விதமான வதை முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இது தாயக தமிழகத்திற்கும்,, இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இலங்கையில் துயருற்றுவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக சட்ட மன்ற தீர்மானங்கள் மூலம் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தில்தான் ஈழத் தமிழர்கள் இப்படியான சிறப்பு முகாம் என்ற பெயரிலான வதைமுகாம்களில் அநீதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாம் தமிழர் கட்சி தெரியப்படுத்துகிறது. சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நம் ஈழ உறவுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் நெடுந்துயர் போக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கோருகிறது..

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சி.

விஷ்ணுபிரியா மரணத்தை கொச்சைப்படுத்தக் கூடாது: சீமான்

கடலூர் அருகே கோண்டூரில் உள்ள தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு சீமான் வியாழக்கிழமை சென்றார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஷ்ணுபிரியா இறப்பு மூலம் காவல் துறையிலுள்ள நேர்மை சாகடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரியா இறந்து கிடந்தபோது அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர், அவர் இறந்த அறைக்குள் செல்லாமலே விஷ்ணுபிரியா கையில் கடிதம் இருப்பதாக கூறியுள்ளார். அவரின் கால்கள் தரையில் தட்டிய நிலையில் இருந்துள்ளன. உடலில் காயங்களும் இருந்ததாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். எனவே உரிய விசாரணை நடத்திட வேண்டும்.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு மேல் அதிகாரியின் நிர்பந்தமே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை வேறு இடத்துக்கு இடமாற்றம் கூட செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் காதல் தோல்வி என்று அவரது மரணத்தை திசை திருப்பி கொச்சைப்படுத்தும் நிலை தான் உள்ளது.
இதனை ஏற்க முடியாது. எனவே தான் மத்திய புலனாய்வு பிரிவின் (சிபிஐ) விசாரணை கோருகிறோம்.
அனைத்துக் கட்சியினரும் சிபிஐ விசாரணை கோருவதால் அதனை முதல்வர் செயல்படுத்த வேண்டும் என்றார்.


14 Sept 2015

திமுக, அதிமுகவிடமிருந்தே தமிழகத்தை மீட்பதே எம் முதல் விடுதலை-சீமான்


 
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சேகரிப்பு மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 12-09-15 அன்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார்.
இதில் அவர் பேசியதாவது:

‘அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை’ என்கிறார் பெருந்தலைவர் காமராசர். ‘அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் விவகாரமல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு’ என்கிறார் எம்முயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அதனைப்போல, அரசியல் என்பது மக்களுக்கான சேவையும் அதனை நிறைவுசெய்யும் சேவையுமே என்று அவரது பிள்ளைகள் நாங்கள் முழங்குகிறோம்.

தமிழர்கள் மனிதநேயர்கள் அல்லர்! உயிர்நேயர்கள். அதனால்தான், எமது பாட்டன் வள்ளலார், ‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடினான். எமது மறை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்று போதிக்கிறது. அந்த மறையின் வழியே நாம் தமிழர் கட்சி அனைத்துவுயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறது.

மாட்டுக்குக் கோமாரி நோய் வந்தால் அதனைக் காக்க மருத்துவ முகாம் நடத்துவது, புண்ணாக்கு, தவிடு விலையேறினால் அதனைக் குறைக்கப் போராடுவது எல்லாம் மாட்டுக்கான அரசியல்; சிகரெட்டைப் புகைத்துவிட்டு காடுகளில் போடாதே என்பது மரங்களுக்கான அரசியல்; ‘தெருநாய் நம்மைக் கடித்தால்கூட அதனை அடிக்காதே! நகராட்சிக்குத் தகவல் சொல்’ என்பது நாய்களுக்கான அரசியல்.

நாம் தமிழரின் அரசியலானது அனைத்து உயிர்களுக்குமானது. நாம் தமிழர் கட்சி அனைத்து மக்களுக்கானது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்மை பெருமை மிக்க ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம்; உலகிற்கு அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்த மண்ணின் மக்கள் நாம்; கடல்கடந்து சென்று கலன் செலுத்தி உலகின் மூன்றாம் வல்லரசை நிறுவிய அருமைப்பாட்டன் அருண்மொழிச்சோழன், அவரது அன்பு மகன் அரசேந்திரச்சோழனின் வாரிசுகள் நாம். இன்றைக்கு அழித்தொழிக்கப்பட்டு மொழியை சிதையக்கொடுத்து அடிமையாய் நிற்கிறோம். ஆனாலும், ஆழ்மனதில் கொட்டிக்கிடந்த கோபத்தை எல்லாம் நம் உடலில் கொட்டிச்செத்தோமே ஒழிய எவரையும் கொல்லவில்லை. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அப்புறம் ஏன் நிறுத்தவில்லை? இருந்த தமிழக அரசு தமிழனுக்கான அரசாக இல்லை.

ஒரு தேசிய இனத்தின் உரிமை மீட்சிக்கு அரசியலை முன்னெடுக்கிறோம். ஊழலற்ற உண்மையும் நேர்மையுமான மக்களாட்சியைக் கட்டியெழுப்பத் துடிக்கிறோம். இங்கு சிறுபான்மையாக இருக்கிற தெலுங்கர்கள் ஆந்திராவில் பெரும்பான்மை தேசிய இனத்தின் மக்கள். இங்கு சிறுபான்மையாக இருக்கிற கன்னடர்கள் கர்நாடாகாவில் பெரும்பான்மை தேசிய இனத்தின் மக்கள். இங்கு சிறுபான்மையாக இருக்கிற மலையாளிகள் கேரளாவில் பெரும்பான்மை இனத்தின் மக்கள். அதனால், பிறதேசிய இனங்களை பகையினமாக மாற்றிக்கொண்டு தேசிய இனத்தின் விடுதலைக்குப் போராட முடியாது. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டியெழுப்பிய இராணுவத்தில் தலைவரின் மெய்காப்புப்படையிலும் சிங்களர்கள் இருந்தார்கள். தலைவர் இந்தளவுக்கு படையைக் கட்ட முடிந்ததென்றால் அதுவும் ஒரு காரணம். கர்நாடாகாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம். ஆனால், அங்கு எங்களுக்கு அரசியல் இல்லை. அந்த மண்ணின் மக்கள் முன்னெடுக்கிற அரசியலோடு இணைந்து பயணிக்கிறோம். அதனைப்போல, மகாராஷ்டிராவிலும் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இருந்தும் எங்களுக்கென்று எந்த அரசியலும் அந்த மண்ணில் இல்லை. அந்த மண்ணைச் சேர்ந்த அரசியல் கட்சிகளோடே இணைந்து பயணிக்கிறோம். இப்படித்தான், இந்த மண்ணில் நாங்கள் முன்னெடுக்கிற இந்த அரசியலை ஆதரித்து நிற்கவேண்டியது பிறதேசிய இன மக்களின் தார்மீகக் கடமை; உரிமை.

நாங்கள் நல்லாட்சியை நிறுவ நினைப்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மக்களுக்கும்தான். இலவசக் கல்வியையும், மருத்துவத்தையும் தருவோம் என்பது அனைத்து மக்களுக்கும்தான். அதனால், எமது அரசியல் அனைவருக்குமானது; தலைமை எப்போதும் தமிழர்களுக்கானது. இங்கு திராவிடத் தலைவர்கள், ‘தமிழர்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம்’ என்கிறார்கள். தமிழர்களின் உரிமையில் முதன்மையான உரிமை, தமிழனே தன் நிலத்தை ஆளுவதுதான். சுயமரியாதையைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். தமிழனே தன் மண்ணை ஆள்வதுதான் அவனுக்கு உண்மையான சுயமரியாதை. ‘ஒருவனுக்கு நல்லாண்மை என்பது தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்’ என்கிறார் எமது மறையோன். எனது வீட்டையும், நாட்டையும் நானே ஆள்வதே எனது ஆண்மை என போதிக்கிறார். தமிழன் இந்த நிலத்தை ஆண்டுக்கொண்டிருந்தால் 20 தமிழர்களை ஆந்திரக் காட்டுக்குள் கொன்று போட்டிருப்பார்களா? ஈழத்தில் போரை நடத்துகிற துணிவு சிங்களனுக்கு வந்திருக்குமா? ஈழத்தில் எமது இன மக்களைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுமா விரும்பினார்கள்? சோனியா காந்தி குடும்பத்தின் ஒற்றை விருப்பத்திலே எம் இனம் கொல்லப்பட்டது. எம் இனத்தைக் கொல்ல ஆயுதங்களும், இராணுவத்தளவாடங்களும், வட்டியில்லா கடனாக பல கோடிகளையும் கொட்டிக்கொடுத்தது காங்கிரசு அரசு. அப்போது தமிழகத்தை ஆண்டது ஐயா கலைஞர் அவர்கள். ‘எம் இனத்தைக் கொல்ல இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுதம் கொடுத்தால், எம் இனத்தைக் காக்க விடுதலைப்புலிகளுக்கு நான் ஆயுதம் கொடுப்பேன்’ என அவரால் சொல்ல முடியாதா? சொன்னால் என்ன செய்வார்கள்? ஆட்சியைக் கவிழ்ப்பார்கள். ஆட்சியைக் கவிழ்த்திருந்தால் அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வென்றிருக்கும். ஏன் ஐயா கலைஞர் செய்யவில்லை? தமிழர்களின் உயிரைவிட அவருக்கிருந்த பதவிவெறி. அதனால்தான், இவர்களை ஒழித்துக்கட்ட பணம், பதவி, புகழ் இவை எவற்றிற்கும் அடிமையாகாத உழைக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள், தினக்கூலிகளின் வாரிசுகள் ‘எளிய மக்களின் அரசியல்  புரட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்து அரசியலை முன்னெடுத்து வருகிறோம். ஒரு பெரும்பாறையை கடப்பாறை கொண்டு புரட்டிப்போடுகிற செயல்தான் புரட்சி. 60 ஆண்டுகளாக ஊழலிலே கொழுத்து பெருத்த பூதங்களாக இருக்கிற திமுகவையும், அதிமுகவையும் ஒரே அடியில் வீழ்த்துகிற செயல்தான் புரட்சி. தோற்றுவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார்கள். வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! தொடரும் முயற்சி; இதுதான் எங்கள் தத்துவம்.



தமிழக அமைச்சர், ‘தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’ என்கிறார். ஒருநாளைக்கு ½ லிட்டர் மட்டும் தண்ணீர் குடியுங்கள் என்கிறார். மருத்துவர் ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார். என்ன செய்யலாம்? எங்களைத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்கிற அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள எப்படி அனுமதிக்கிறது? தண்ணீர், அனைத்து உயிர்களுக்கானது. நாம் தாகம் எடுத்தால் தண்ணீரைப் பருக தண்ணீர் போத்தலை வாங்கிக் பருகுகிறோம். தண்ணீரை வியாபாரமாக்கி போத்தலில் அடைத்துவிட்டால் கொக்கும், குருவியும் எப்படி தண்ணீர் பருகும்? ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எங்களுக்கே ‘தண்ணீரையும், உப்பையும் விற்கக்கூடாது’ என்று சொல்லி வளர்த்திருக்கிறார்கள். அரைநூற்றாண்டுகளாக ஆண்ட ஆட்சியாளர்களுக்கு இதுகூடத் தெரியாதா? எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிற அரசு தண்ணீரை மட்டும் ஏன் காசுக்கு விற்கிறது? அரைநூற்றாண்டுகளாக இந்த மண்ணை ஆண்டிருக்கிறது திராவிடக்கட்சிகள். ஆனால், வெறும் 9 வருடங்களே ஆண்ட காமராசர் ஆட்சியில் செய்த எதனையும் செய்யவில்லையே ஏன்? பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைக்கிறது. ராஜபக்சே எம்மின மக்கள் ஒன்றரை முக்கால் இலட்சம் பேரைக் குண்டுப் போட்டுக் கொன்றான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் குடிக்க வைத்து இரண்டு இலட்சம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். இந்த இருசெயல்களுக்கும் என்ன வேறுபாடு? ராஜபக்சேவும் இனத்தின் எதிரிதான். இவர்களும் இனத்தின் எதிரிகள்தான். கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் சொந்தமாகவே மதுபான ஆலைகள் இயங்குகிறது. மதுபானக்கடைகளில் மது விற்றால் கடைக்குக் காசு போகிறது. மதுபான ஆலைகளில் மது விற்றால் இருவருக்கும்தானே காசு போகிறது? அரைநூற்றாண்டுகாலத் திராவிட ஆட்சியில் வெட்டப்பட்ட ஏரிகள் எத்தனை? எண்ணற்ற ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, ஒரு ஏரியும் வெட்டப்படவில்லையே! குளிக்காமல் ஒருவாரம்கூட இருந்துவிடலாம்; தண்ணீர் குடிக்காமல் ஒருநாள் கூட இருக்க முடியாது. இதனைத்தான், ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறான் எமது பாட்டன் வள்ளுவன். அந்த நீரைச் சேமிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது அரசு? ‘வீட்டில் மழைநீரை சேமியுங்கள்’ என்கிறார்கள்; வீட்டில் நாங்கள் சேமிக்கிறோம். நாட்டில் நீங்கள் எவ்வளவு மழைநீர் சேமித்திருக்கிறீர்கள்?
நாம் தமிழர் ஆட்சிக்கு வருகிறபோது வயிறுக்கும், உயிருக்கும்தான் முதன்மை முக்கியத்துவம் அளிக்கும். ‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்கிறார்கள். பசி வருகிறபோது மனிதனின் உயரிய பத்து குணங்களும் பறந்துவிடும்; ஒழுக்கச்சிதைவு ஏற்படும். பசிக்காக மனிதன் களவில் ஈடுபடுகிறான். அதனால், அதனை முதலில் போக்க வேண்டும். ஏழைகளுக்கொரு மருத்துவம் பணக்காரனுக்கு ஒரு மருத்துவம் என்று இருக்கிற நிலையை அடியோடு மாற்ற வேண்டும். அம்மையார் சோனியா காந்திக்கு புற்றுநோய் வந்தது; வெளிநாட்டில் போய் மருத்துவம் செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் வந்தது; அவரும் வெளிநாட்டில் போய் சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், ஏழைஎளிய மக்களுக்கு புற்றுநோய் வந்தால் என்ன செய்வது? அதனால், தரமான மருத்துவமும், கல்வியும் நாம் தமிழரின் ஆட்சியில் இலவசமாகக் கொடுக்கப்படும். உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், அதனைக்கொண்டு கௌரவமான உழைப்பு; இதுதான் எங்கள் இலட்சியம்.

ஐயா கலைஞர் ஆட்சியில் கிலோ அரிசியை 2 கிலோவுக்கு கொடுத்தார்கள். பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்குப் வந்தபிறகு அதனையும் 1 ரூபாய்க்கு கொடுத்தார்கள். அடுத்த முறை கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அதனையும் இலவசமாகக் கொடுத்தார்கள். இலவசமாக அரிசியைக் கொடுத்தால்தான் வாங்கிச் சாப்பிட்டு வயிறு வளர்த்து உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் எம் மக்களை வைத்ததுதான் திராவிடக்கட்சிகளின் வளர்ச்சி. அரிசியை இலவசமாகக் கொடுக்கிற அரசு மண்ணை இலவசமாகக் கொடுக்குமா? ஆண்டுமுழுக்க நிலத்திலே நின்று உடல்இரத்தமெல்லாம் வியர்வையாகப் பூக்க பூக்க நிலத்தில் நின்று உழைக்கிற விவசாயியை இழிவுப்படுத்துகிற செயலில்லையா இது? இலவசமாக அரிசியைக் கொடுப்பது வேளாண்தொழிலை கேவலப்படுத்துகிற வேலை.

இன்றைக்கு அந்நிய முதலீட்டாளர்களைக் கொண்டுவருகிறார்கள். அப்படி வருகிறவர்கள், இலாபத்தேவைக்கு வருவார்களா? மக்கள் சேவைக்கு வருவார்களா? என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்நிய முதலீட்டாளர்களுக்கு நிலத்தை கொடுக்கிறபோது யாருடைய நிலத்தைக் கொடுப்பார்கள்? எம் விவசாய நிலத்தைத்தானே! எல்லா நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்கிறது. இந்தியா எந்த நாட்டில் இதுவரை முதலீடு செய்திருக்கிறது? ஏன் அவர்கள் எல்லாம் இங்கு வருகிறார்கள். இங்குதான் அவர்கள் இலவசமாக நிலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்; தண்ணீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளலாம்; தடையற்ற மின்சாரம் இங்குதான் கிடைக்கும்; உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி என எந்த வரியும் இங்குதான் அவர்களுக்கில்லை. ஆனால், ஒரு ஓலைக்குடிசையில் ஒரு ஏழைப்பாட்டி பூவரசம் இலையில் ஊறுகாய் மடித்து விற்றால் அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, தண்ணீர் வரி எல்லாம் விதிக்கப்படுகிறது. அந்நிய நாட்டிலிருந்து வந்த நோக்கியா ஆலை என்ன ஆனது? பல்லாயிரம் கோடிகள் கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டான். வெளிநாட்டிலிருந்து வந்தது குண்டாய் நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி வேலை செய்கிற தமிழன் ஒருவனை எட்டி உதைத்தானே என்ன செய்ய முடிந்தது? அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போன என்னைத்தான் அனுமதி மறுத்தார்கள். அதனால், எங்களுக்கு எந்த அந்நிய முதலாளியும் வேண்டாம்; எல்லோரும் வெளியேறுங்கள். நாங்களே எம் நிலத்தைப் பார்த்துக்கொள்கிறோம். எம் நிலமே எங்களுக்குத் தொழிற்சாலை. வேளாண்மை தேசியத்தொழில் என நாங்கள் அறிவிப்போம். மாட்டுக்கு ஊசி போடும் வேலையை அரசாங்க வேலையாக்க முடியும்; டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மது ஊற்றிக்கொடுப்பவர்களை அரசு வேலையில் அமர்த்த முடியும்; வேளாண் தொழில் செய்வோரை அரசுப் பணியாளராக்க முடியாதா?
நாம் தமிழர் ஆட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் மக்களுக்கு இலவசம். மக்களுக்கு அத்தியாவசியமான இதனைத்தவிர எந்த இலவசமும் கிடையாது. ‘ஆறுதலால் காயங்கள் ஆறாது; தூறல்களால் பயிர்கள் விளையாது; எம் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்’ என முழங்குகிறார் குன்றக்குடி அடிகளார். இந்த நாட்டில் சலுகை, போனஸ், மானியம் இதனைத்தவிர வேறு என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? இன்றைக்கு வெங்காயம் விளையுயர்ந்துவிட்டதென எகிப்திலிருந்தும், இத்தாலியிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறார்கள். பாலைவனத்தில்கூட வெங்காயம் விளைந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. பாலைவனத்தில் விளையும் வெங்காயம் எம் பொன்விளைகிற மண்ணில் விளையாதா? ஏன் செய்யவில்லை. விவசாயிகளையெல்லாம் நிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள்.
மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்கிறார்கள். மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் பெருமுதலாளிகளில் மூவர் பார்ப்பனர்கள். எல்லோரையும் உண்ணக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர்களே ஏற்றுமதி செய்கிறார்கள். ஏனென்றால், மாட்டுக்கறிதான் அதிக இலாபத்தைப் பெற்றுத்தருகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் மாட்டுக்கறியை உண்டுவிட்டுத்தான் பயிற்சி செய்கிறார்கள். அதுதான் உடலுறுதியைத் தரும். ஜமைக்காவில் உசேன் போல்டு என்ற உடலுறுதி கொண்ட ஒரு வீரன் இருக்கிறான். அவன் ஒருவன் உடலுறுதிகொண்ட இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள் என தன் நாட்டை அடையாளப்படுத்துகிறான்.

90 விழுக்காட்டினர் பால், கறி, முட்டையை உண்கிறார்கள். 100 விழுக்காட்டு மக்கள் காய்கறியைத்தான் உண்ணுகிறார்கள். இதெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது? கிராமப்புறங்களிலிருந்துதானே! அப்படியென்றால், சிற்றூர்களின் பொருளாதாரத்தை உயர்த்தாது எப்படி பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்? டென்மார்க் என்ற ஒரு நாடு ஆடு, மாடு மேய்த்தே உயர்ந்து நிற்கிறது. ஆனால், எல்லா வளமும் இருந்தும் நம் நாடு திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கிறது. தமிழர்களின் இயற்கைவளம் சுரண்டப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரை மண்ணை அள்ளிக்கொண்டு போய் ஒரு லாரி மணல் ஒரு இலட்சம் எனக் கேரளாவில் விற்கிறார்கள். அரை அங்குலம் ஆற்று மணல் வளர 100 ஆண்டுகள் ஆகும் என்கிறது ஆய்வுகள். ஆனால், மக்களுக்கு குடிநீரைத் தருகிற கிணற்றைச் சுற்றிக்கூட மணல் அள்ளப்படுகிறது.

ஐயா ஸ்டாலின் முதல்வராக ஆசைப்படுகிறார். ஜெயலலிதாவும் மறுமுறையும் ஆளத்துடிக்கிறார். இவர்கள் ஏன் மீண்டும் ஆள வேண்டும்? இதுவரை செய்யாத எதுவொன்றை இப்போது புதிதாக செய்யப்போகிறார்கள்? நல்லாட்சியைத் தருவேன் என்றால், இதுவரை ஏன் அதனை தரவில்லை? இலவசத்தை நாங்கள் விமர்சிப்போம் என்பதற்காக அதனை ‘விலையில்லாப் பொருள்’ என அழைக்கிறார்கள். அந்தப் பொருள்கள் மக்களுக்கு விலையில்லாமல் வருகிறது. அரசுக்குமா விலையில்லாமல் வருகிறது? அந்தப் பொருள்களைக் கொடுப்பதால் வரும் பொருளாதார இழப்பைச் சரிகட்ட என்ன செய்யப்போகிறார்களா? சாராயம் விற்கலாம் என்பதுதானே அரசின் திட்டம்.

ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கருணாநிதியின் மகன் என்பதைத்தவிர கூடுதலாக என்னத் தகுதியிருக்கிறது? மக்களின் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிக்கிறார். எழுதிவைத்து படிப்பவர் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும்? எங்கள் ஐயா ராமதாசும், அண்ணன் திருமாவளவனும் 25 ஆண்டுகள் அரசியல் செய்து கிடைக்காத அங்கீகாரம் வெறும் 7 ஆண்டுகளில் ஐயா விஜயகாந்த்க்கு கிடைத்திருக்கிறது. ஆனால், விஜயகாந்த் சட்டமன்றத்திற்குப் போவதில்லை. ‘சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால்தான் செல்வேன்’ என்கிறார். சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால்தான் சட்டமன்றத்திற்கு செல்வேன் என்று சொல்லியா விஜயகாந்த் வாக்கு கேட்டார்?
‘மண்ணின் புரட்சி தோன்ற வேண்டுமானால் முதலில் மக்களின் மனங்களில் தோன்ற வேண்டும்’ என்கிறார் ஐயா மு.வரதராசனார். அந்தப் புரட்சியை விதைப்பதற்காகவே உங்கள் பிள்ளைகள் வந்து நிற்கிறோம். எங்களிடம் சின்னம் இப்போது இல்லாததால் எங்கள் எண்ணங்களை விதைக்கிறோம். 65 ஆண்டுகளாக திராவிட ஆட்சிக்கு முடிவுகட்ட உங்கள் பிள்ளைகள் களத்தில் நிற்கிறோம். தமிழனுக்கு கட்சி பகுதி, தொகுதி கட்சியாய் இல்லாது பொதுக்கட்சியாய் இருக்க வேண்டும் என 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறோம். ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாங்கள் அரசியலை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இங்கு நடப்பது தன்னலம் சார்ந்த கொடுமையான சர்வாதிகாரம். அதனால்தான், ‘நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று’ என்று உங்கள் பிள்ளைகள் வந்தோம். பணம் வைத்திருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உடைத்து, ‘எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள்’, ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம்’ என்பதை நிலைநாட்டத் துடிக்கிறோம். பாலுக்கு அழாத குழந்தை; கல்விக்கு ஏங்காத மாணவன்; வேலைக்கு அலையாத இளைஞன்’ இதுவே எனது கனவென்றான் பகத் சிங். அந்தக் கனவைக் கொண்டே உங்கள் பிள்ளைகளும் நிற்கிறோம். நாங்கள் சாதாரணமானவர்கள்; அசாதாரணத்தை மட்டுமே கனவு காணக்கூடியவர்கள் என்ற சேகுவேராவின் முழக்கத்தை முன்வைத்து தீய அரசியலை ஒழித்து தூய அரசியலை கட்டியெழுப்புகிறோம். இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான முதல் விடுதலை, கருணாநிதி, ஜெயலலிதாவிடமிருந்து எம் மண்ணையும், மக்களையும் மீட்பதுதான்.

முதலில் ஐம்பாதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த எம் தாய்மொழி தமிழ்மொழியின் மீட்சி; மொழி மீட்சியைக் கொண்டு சாதி, மத உணர்வைத் தகர்த்து தமிழ்த்தேசிய ஓர்மை; அந்த ஓர்மையைக் கொண்டு தமிழருக்கென ஒரு வலிமையான அரசியல்; அந்த அரசியலைக் கொண்டு தமிழருக்கென்று ஒரு அரசு; அந்த அரசைக் கொண்டு இறையாண்மையுள்ள ஒரு அரசாங்கம்; அதனைக் கொண்டு பரந்து விரிந்துக் கிடக்கிற பூமிப்பந்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவைச் சுமந்து அதனை அடைய வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி உயிரையே விலையாகக் கொடுத்து பன்னாட்டு அரசியலாக மாற்றி நிறுத்தியிருக்கிற தனித்தமிழீழ சோஷலிச குடியரசை அடைந்து தமிழருக்கென ஒரு தேசம் படைப்பதுதான் நமது உன்னத நோக்கம்.
இவ்வாறு சீமான் பேசினார்.


இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் லெமூரியன், மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரிசாலன், மாநில ஆட்சிமொழிப் பாசறை செயலாளர் மறத்தமிழ்வேந்தன், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் அருண்குமார், சாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், மாதவரம் தொகுதி வேட்பாளர் ஏழுமலை, திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கோகுலகிருஷ்ணன், பொன்னேரி தொகுதி வேட்பாளர் வினோத் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார் சீமான்.

31 Aug 2015

வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு...


வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30-2015 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் செந்தமிழன் சீமான் ஆற்றிய மரபியல் மீட்சியுரையில் இருந்து சில ....
------------------------------------------------------------

1.தமிழ்நாட்டில் நடக்கிற திருமணங்கள்,கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கேரள செண்டை மேளத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தமிழர்களின் பாரம்பரிய தவில்,மேளம், நாயனம், நையாண்டி மேளம் போன்ற இசைக்கலைகளை ஊக்குவிக்க வேண்டும் -இனி செண்டை மேளத்தை பயன்படுத்தும் விழாக்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.
2. இந்து மதம் என்பது கிருஸ்தவ,இஸ்லாமிய மதங்களைப் போலவே இறக்குமதியான ஒன்று. அது தமிழர்களின் மதம் இல்லை.
3. கிராமப்பூசாரிகள் எப்போதும் தாய்மொழி வழிபாட்டை கைவிடக்கூடாது.
4. தெய்வங்கள் யார்- அவர்கள் எங்கள் முன்னோர்கள்.மூத்தோர்கள். அவர்கள் உயரிய செயல்களால் எங்கள் குலசாமியாகி போனார்கள். அவர்களை வழிபடுவது எங்களது கடமை.
5. தமிழக மக்களை ஜெயலலிதா,கருணாநிதி என்கிற இரண்டு நபர்களிடமிருந்து மீட்க வேண்டும்.
6. என் மண்ணை நான் ஆள வேண்டும் என கோருவது எனது தார்மீக உரிமை. அதை யாருக்காவும் ,எதற்காகவும் விட்டுத்தர இயலாது.
7. துரோகியால் கூட குற்றஞ்சாட்ட முடியாத புனிதராக நம் தலைவர் பிரபாகரன் விளங்கினார்.
8. இப்போது தன்னை இரணீய வம்சம், இராவண வம்சம் என பேசும் கருணாநிதி இராம் லீலா மைதானத்தில் தமிழனாகிய இராவணனை அம்பெய்தி கொல்லும் நிகழ்விற்கு என்றாவது கண்டனம் தெரிவித்துள்ளாரா...?
நீங்கள் இராவண வம்சம். நாங்கள் இராவண அம்சம்.
நன்றி:மணி செந்தில்





29 Aug 2015

நீண்ட இடைவெளிக்கு பின்பு சீமான் நடிக்கும் திரைப்படம்..!



தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘முந்திரிக்காடு.’ இந்தப் படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - G.A. சிவசுந்தர்
இசை - A.K. பிரியன். ( இவர்A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )
பாடல்கள் - கவிபாஸ்கர்
எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ்
கலை - மயில் கிருஷ்ணன்
ஸ்டண்ட் - லீ.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது, “முந்திரிக்காட்டு பகுதி மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப் போன முந்திரியின் விளைநிலங்களில், சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும். அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா என்பதுதான் கதை.
தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது..” என்றார்.





18 Aug 2015

அரசின் இலவச பொருட்களை ஒப்படைக்க வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது!

திருச்சியில் அரசின் இலவச பொருட்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் தினம்தினம் தீவிரமடைந்து வருகிறது. முதன்முதலில் கடந்த மாதம் மதுக்கடைகளை மூடக்கோரி, திருச்சியில்தான் மதுக்கடை ஒன்று, நாம்தமிழர் கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு வழங்கிய இலவச பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க, இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு கிளம்பிய நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையிலான தொண்டர்கள், திருச்சி நீதிமன்றத்தின் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்.. இலவச பொருட்கள் வேண்டாம்..!" என அறிவித்த போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையின் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் திருச்சி போலீஸார் அனுமதி மறுத்ததால், இன்று காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு,  நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 
 
தமிழக அரசு வழங்கிய இலவச கலர் டிவி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும், இலவச பொருட்கள் வேண்டாம்!"  என டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி,   மாவட்ட ஆட்சியரிடம் அரசு வழங்கிய இலவச பொருட்களை ஒப்படைக்க புறப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன் போலீஸார் தடுத்து நிறுத்தினர். வேறு வழியில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்திற்கு முன்பே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிது நேரம் அங்கேயே தொடர்ந்து  கோஷம் போட்டுக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில்,  தலையில் அரசு இலவச டிவியை வைத்திருந்த வீரா என்பவர், அதனை ரோட்டில் தூக்கி போட்டு உடைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அருள் அமரன், வீராவை தனியாக வேனில் ஏற்றினார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ஏசி அமரனின் நகம் கீறி வீராவின் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமல் போலீஸார் பலவந்தமாக வேனில் ஏற்றினர். இதனை தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதெல்லாம் முடிந்த பிறகு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த போலீஸார், கடைசியில் விலையில்லா பொருட்களை பத்திரமாக பறிமுதல் செய்து, வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.
கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "தமிழினத்தை சீரழிக்கும் சொல் இலவசம். ஆளும் அ.தி.மு.க.வும் சரி, ஆண்ட தி.மு.க.வும் சரி, மதுவில் வருகின்ற வருமானத்தில்தான் இலவசம் கொடுக்கின்றார்கள். எங்களுக்கு இரண்டுமே தேவையில்லை.
இதனை வலியுறுத்தி இலவச பொருட்கள் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் சட்டப்படி நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதிக்கப்பட்டது. பிறகு அமைதியாக ஆட்சியரிடம் இலவச பொருட்களை ஒப்படைக்கப்போன எங்களை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ளார்கள். மிக மோசமாக நடத்தினார்கள். இந்த அடக்குமுறைகளை எல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். மதுக்கடைகளை மூடும்வரை ஓயமாட்டோம்" என்றார் காட்டமாக.

15 Aug 2015

பணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் தங்களது புதிய மாற்று ஊதிய உயர்வு திட்டத்தைச் செயல்படுத்தக்கோரி போராட்டத்தைத் தொடங்கி நடத்திவருகின்றனர். அதுபோல, கடந்தாண்டு அங்கு பணியாற்றிய பதிமூன்றாயிரம் ஒப்பந்தப்பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பலனளிக்காமல் தொடர்ந்து வருகிறது. மேலும், நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் இந்தியாவிலேயே தலைசிறந்த இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனம் 2014-15 இவ்வாண்டு சுமார் 1500 கோடி நிகரலாபம் ஈட்டி இருக்கிறது என்றால் அது எமது மக்களின் கடும் உழைப்பால்தான் அதை நிகழ்த்த முடிந்தது என்பதை நிறுவனத்திலுள்ள வெளிமாநில உயரதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலத்தையும் நீரையும் இழந்து அதனால் ஆண்டாண்டுக் காலமாக தாங்கள் செய்துவந்த வேளாண்மைத் தொழிலையும் பறிகொடுத்து வாழ்விழந்து எமது மக்கள் இந்நாட்டிற்குச் செய்திருக்கிற பெரும் ஈகத்தை நன்றியுணர்வுடனும், மனிதநேயப் பண்புடனும் உயரதிகாரிகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து வெறும் வறட்டுத்தனமான போக்குடன் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்றால் அது முடியாது.
கடந்த ஆண்டு நடைபெற்றப் போராட்டங்களின் தீர்வாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு நிறுவனம் ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்யாமல் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்து கண்துடைப்பு நாடகங்களை மேற்கொண்டுவரும் நிருவாகம், தற்போது கடந்த ஆண்டு போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தலைவர் பா.திருமாவளவனை 11-08-15 முதல் பணிநீக்கம் செய்திருப்பது பெரும்அடாவடித்தனமாகும். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இந்தப் பணிநீக்க ஆணையை நெய்வேலி நிருவாகம் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றேன். மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள்  நியமனத்திலும்
மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படை கோட்பாட்டிற்கு முரணாகத் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து வெளிமாநில தொழிலாளர்களைப் கொத்தடிமைத்தனமாக பணிநியமனம் செய்து வருகிறது.

கடந்த ஐந்தாண்டில் மட்டும் நிரப்பப்பட்ட 250 பட்டயப்பொறியாளர்களின் நியமனத்தில் 4 பேர் மட்டுமே தமிழர். 160 சுரங்கத்தொழிலாளர்களில் 3 பேர் மட்டுமே தமிழர். மனித வளத்துறையில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் மற்ற அனைவரும் பிற மாநிலத்தவர்களைக் கொண்டு பணிநியமனம் செய்திருப்பது அந்த மண்ணையும் இழந்து வேலைவாய்ப்பையும் இழந்து தவிக்கும் மக்களின் வெந்தபுண்ணில் வேல் கொண்டு குத்துவது போன்ற கொடிய செயலாகக் கருத வேண்டியுள்ளது.
அதுபோல், ஆண்டாண்டுக் காலமாக அம்மண்ணில் குடியிருந்துவரும் விருத்தாச்சலம் வட்டம் தாண்டவன்குப்பம் கிராமத்தில் சுமார் 1500குடும்பங்களைச் சார்ந்த 5000 மக்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிக்கூட வசதி, மருத்துவ வசதி என எவ்வகையான அடிப்படை வசதிகளையும் செய்துதரவிடாமல் அம்மக்களை வஞ்சித்துவரும் நிறுவனத்தின் போக்கு மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க வன்கொடுமைப் போக்காகும்.
இவற்றை எல்லாம் வேடிக்கைப்பார்க்கும் அரசாகத் தமிழக அரசு இருப்பது மேலும் வருந்துவதற்குரிய ஒன்றாகும். எனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உடனடியாக இவற்றை எல்லாம் உரியவாறு பேச்சுரை நடத்தி சுமூகமாக தீர்வு காண முன்வந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசும் இதில் பாராமுகமாக இருப்பதைக் கைவிட்டு நமது தொழிலாளர்களின் நலனில் அக்கறைக்கொண்டு உடனடியாகத் தலையிட்டு சிக்கலுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
`இல்லையேல், இதில் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8 Aug 2015

பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை கூட்டம..

பெரம்பலூர் மாவட்டம் நாம்தமிழர் கட்சியின் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம நடைபெற்றது, 

நாள்-
====
08/08/2015, மாலை 6 மணி
தலைமை
=========
மாவட்ட செயலாளர் ப.அருள்
கொள்கை விளக்கவுரை
=========
திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு எழுச்சியுரை நிகழ்த்தினர்.
முன்னிலை
=========
மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , 
மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன்.





பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

பெரம்பலூர் மாவட்டம், ஒலைப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் திமுக பிரமுகர் கருணாநிதியின் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் ,ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அவர்களை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது, அவர்களை கண்டித்தும், ,இவர்கள் ஊழலை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் , மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.அருள் அவரகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கண்டன உரை : திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு .
அப்பா அசன் முகமது மாநில ஒருங்கிணைப்பாளர்,
சேது.மனோகரன்-திருச்சி மண்டல செயலாளர்
முஹமது யூசுப் மறுமலர்ச்சி தமுமுக,
கண்டன உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் , மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.






6 Aug 2015

கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்

டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:
மதுவிலக்கு கோரி திமுகவும், வைகோவும் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களில் வைகோவின் மகன் சிகரெட் விற்கிறார். டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக சாராய ஆலைகள் இயங்குவதாக கூறுகிறார்களே, அப்படியென்றால், அவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்களே?
அதிலென்ன சந்தேகம்! சிகரெட் வியாபாரி மது வியாபாரத்தை கண்டித்து போராடுகிறார். மதுவை காய்ச்சி விற்பவர்கள் மதுவுக்கு எதிராக போராடுகிறார்கள். நாங்கள் போராடுகிறோம் என்றால், அதில் ஒரு நியாயமிருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியபோது மதுபானக்கடைகளை நடத்தியவர்கள் நாங்களும் போராடுகிறோம் என்றால், எப்படி ஏற்பது? 5 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியிலும் மதுபானக்கடைகள் இருந்துகொண்டுதான் இருந்தது. அதிமுகவுக்கு மிடாஸ் ஆலைகள் என்றால், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆலைகளிலிருந்து மது காய்ச்சி விற்கப்பட்டது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மதுவிலக்கைப் பற்றிப் பேச என்ன தகுதியும், நேர்மையும் இருக்கிறது? அப்படியென்றால், குறைந்தபட்சம் திமுகவினர் நடத்துகிற மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். நான் கடந்த காலங்களில் செய்தது தவறென்று, மக்களிடம் கருணாநிதி பொதுமன்னிப்பு கோர வேண்டும். இன்றைக்கு குழந்தைகள், மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். மாணவர்களும், குழந்தைகளும் குடிப்பார்கள் என்ற தொலைநோக்குப்பார்வை கூடவா இல்லாது கருணாநிதி இவ்வளவு ஆண்டுகளாக நாட்டையாண்டார்? 2006-யிலும் மதுவிலக்கை கொண்டுவருவேன் எனக் கூறினார் கருணாநிதி. வந்தபிறகு, சட்டமன்றத்தில் சாத்தியமில்லை என்றார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூடுவேன் என்கிறார். வந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். மதுவுக்கு எதிராக மக்களுக்கு வெறுப்புணர்வும், கோபமும் இருக்கிறது; வருகிற தேர்தலில் முக்கியக்காரணியாக மது இருக்கும் என்பதால் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் சொல்கிறார். அதனால், இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை.
மதுபானக்கடைகளை மூடக்கோரி மக்கள் நடத்துகிற போராட்டங்களை அரசு எப்படி அணுகுகிறது?
பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறது. அங்கு பெண்கள் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்லும் பெண்கள் எல்லாம் முகச்சுழிப்போடும், வேதனையோடும் செல்கிறார்கள். பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளை அனுப்ப முடியவில்லை என்று தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் இருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடுங்கள் என்றுதான் குறைந்தபட்ச கோரிக்கை வைக்கிறோம். அந்தக் கோரிக்கையை வைத்துதான் ஐயா சசிபெருமாள் போராடி, செத்தார். அவரது உடல் இன்னும் அடக்கம்செய்யாமலிருக்கிறது. அதனைப்பற்றி எவரும் பேசவில்லை. அவரது குடும்பங்கள் இன்னும் பட்டினிப்போராட்டம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன மதுபானக்கடைகளை எங்கள் பெயருக்கு எழுதி வையுங்கள் என்றா கேட்கிறார்கள்? குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள், அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி? மக்களால் நான்! மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம்? இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்களின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைக்கிறேன்; கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கிற கடைகளையாவது அகற்றுகிறேன் என அரசு வாய்திறந்து பதில் சொல்ல வேண்டும். பக்கத்தில் கேரளா நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால், கேரளாவைப் போல படிப்படியாக 6000 மதுபானக்கடைகளில் குறைந்தது 500 மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். அதனையெல்லாம் விடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பது, மக்களுக்கும், அரசுக்குமான ஒரு அகந்தைப்போர் போலதான் இருக்கிறது.
சிறையில் அடைப்பதன்மூலம் இந்தப்போராட்டத்தை ஒடுக்க முடியுமா?
4000 பேர் என்பதால், சிறையில் அடைத்துவிட்டார்கள்; 4 இலட்சம் பேர் வந்தால் என்ன செய்வார்கள்? அப்படியெல்லாம், அரசு செய்வது முறையாகாது. மக்களின் கோரிக்கை நியாயமானதா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். சாத்தியமா? இல்லையா? என்பதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் குடித்து விடுவான் என்று காரணம் சொல்கிறார்கள். தெருவுக்கு 2 மதுபானக்கடை வைத்திருக்கும்போது, குடிப்பவனைவிட பக்கத்துக்கு மாநிலத்தில் போய் குடிப்பவனின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால், குடிப்பவர்களின் எண்ணிக்கையாவது குறையுமல்லவா? அதனால், இந்தப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது வேறொரு பக்கம் வெடித்துக்கொண்டிருக்கும். அதனால், அரசு அதனை செய்யக்கூடாது. அப்படிப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் அது அராஜகம்; அதிகாரத்திமிர்.

5 Aug 2015

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 08/08/2015 மாலை 4மணி
இடம் : புதிய பேருந்து நிலையம்
இவன் .
மு.ஜலால்லுதீன்
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை



31 Jul 2015

மதுவை ஒழிக்க தன்னுயிரை தியாகம் செய்தவர் அய்யா சசிபெருமாள் – செந்தமிழர் சீமான் உருக்கம்



உயிரையும் பொருட்படுத்தாமல் சாவை முன்னிறுத்தி அய்யா சசிபெருமாள் மது ஒழிப்பிற்காக போராடினார் என்று செந்தமிழர் சீமான் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் பல வழிகளில் மது ஒழிப்பிற்காக போராட்டத்தை முன்னிறுத்திய காந்தியவாதி அய்யா சசிபெருமாள் இன்று மக்களின் உயிரை குடிக்கும் மதுவை ஒழிக்க தன்னுயிரை கொடுத்துள்ளார் என்றும், இந்த ஒரு உயிரை நினைத்தாவது தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழர்களின் உயிரை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யாவின் உயிரிழப்பு மது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்த சீமான், இனியும் தமிழக அரசு மதுக்கடைகளை மூடாவிட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.

28 Jul 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு:
1) கடலூர் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் முள்வளைவு அமைத்திட வேண்டும்.
2) கடலூரில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி ரூ.5 இலட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
3)கடலூர் கெடிலம் ஆற்றின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் நாசப்படுத்தும் நெல்லிக்குப்பம் EID பாரி சர்க்கரை ஆளைக் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்.
4)பெரியப்பட்டில் சாய தொழிற்சாலையை நிறுவி விவசாய நிலத்தையும், நீர் வளத்தையும், கடல் வளத்தையும் கூட்டாக அழிக்கும் SIMA சாயத்தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும்
5)நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திருக்குளம், பனந்தோப்பு, ஆரோக்கியசாமி தெரு, ரகுமான் நகர் ஆகிய மக்கள் வசிக்கும் பகுதியின் நடுவில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை தடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.

21 Jul 2015

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..


தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.
அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?
கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?
யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?
தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.
.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?
இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?
எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?
தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)
சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.
கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???
தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?
மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?
seeman_2417919f
எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?
நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??
அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?
தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.
ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.
பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.
அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.
தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.
.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.
அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.
எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.
எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.
அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.
கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..
சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…
அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.
இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..
காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.
.யார் வலது சாரி, இடது சாரி என…
..மணி செந்தில்

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்