மீத்தேன் திட்டத்தை எதிர்த்து 1 கோடி கையெழுத்து: பழ.நெடுமாறன் தொடங்கினார்!
தஞ்சாவூர்: மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் திட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.

மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற கெயில் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்க கூடாது, மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், காவிரி படுகையை வேளாண்மை மண்டலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை உலக தமிழர் பேரவைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment