முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இருந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், மசூதியை இடித்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கோரியும், பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்கக் கோரியும், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்திசிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மீரா மொய்தீன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் ரஷீத் அஹமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சுல்தான் மொய்தீன், மாவட்டப் பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஹயாத் பாஷா, நூர் முஹம்மது, மாவட்டத் துணைச் செயலர் குதரத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை, செய்தி தொடர்பாளர் பேரா. முருகையன், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் வழக்குரைஞர் அருள், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பேச்சாளர் முத்துப்பேட்டை மாலிக், மாணவரணிச் செயலர் முஹம்மது இலியாஸ் அலி, நகரச் செயலர் முஹம்மது அனிபா, மாணவர் இந்தியா மாவட்ட செயலர் ஜமீர் பாஷா, ஒன்றியப் பொருளாளர் சாதிக் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment