சீமான் -உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம்.
வேலூர் சிறைச்சாலை நீண்ட வரலாறுகளை கொண்டது. அதன் நெடிய சுவர்கள் பழம் பெருமை உடையன. ஆனால் எம்மைப் போன்றவர்களுக்கு அச்சிறை நெருக்கடிகளையும்,சோதனைகளையும் தந்தாலும், நெஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் நினைவுகளையும், உயிராய் உடனிருக்கும் உறவுகளையும் தந்த இடமாகும். ஆம். அங்குதான் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அண்ணன் சீமான் அவர்கள் இருந்த போது அவரை பார்க்க வந்த தம்பி மணி செந்திலை சந்தித்தேன். பார்ப்பதற்கு மிக எளிமையாக, அமைதியாக இருந்தாலும் அவனிடம் இனம் காக்க போராடும் மன உறுதியும்,உண்மையான தமிழுணர்வும் தென்பட்டன. தம்பி மணி செந்தில் மிகுந்த அன்புடையவன். பழகியவர்களுக்கு தெரியும். அவனை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது. பார்த்த முதல் பார்வையிலேயே அவனும் ,நானும் நெருக்கமான அண்ணன்,தம்பிகளாகி விட்டோம்.
அண்ணன் சீமான் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் தம்பி மணி செந்தில் எழுதிய கட்டுரைகளை உற்சாகமாக பாராட்டி விட்டு எங்களுக்கும் படிக்கத்தருவார். அவனது கருத்தாழம் மிக்க எழுத்துக்களை கண்ட போது எனது வாழ்க்கையை,என் வலிகளை தம்பி மணி செந்தில் மூலமாகத்தான் பதிவு செய்திட வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படியாக பிறந்ததுதான் எனது வாழ்க்கை பதிவான “விடுதலைக்கு விலங்கு “
எமது வழக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நான் அனுபவித்த கடும் சித்ரவதைகளையும், என் வாழ்க்கையின் ரத்தம் தோய்ந்த பக்கங்களையும் தம்பி மணி செந்திலிடம் நான் விவரித்தேன், கண்கலங்கிக் கேட்டுக் கொண்டிருந்த அவன் காரியத்தில் இறங்கினான். நான் விவரித்ததை ரத்தமும்,சதையுமாக தன் எழுத்தில் வந்து நிறுத்தி என்னோடு ஒருவனாய் கலந்தான் தம்பி மணிசெந்தில்.
எமது வழக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நான் அனுபவித்த கடும் சித்ரவதைகளையும், என் வாழ்க்கையின் ரத்தம் தோய்ந்த பக்கங்களையும் தம்பி மணி செந்திலிடம் நான் விவரித்தேன், கண்கலங்கிக் கேட்டுக் கொண்டிருந்த அவன் காரியத்தில் இறங்கினான். நான் விவரித்ததை ரத்தமும்,சதையுமாக தன் எழுத்தில் வந்து நிறுத்தி என்னோடு ஒருவனாய் கலந்தான் தம்பி மணிசெந்தில்.
யாராவது விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து விட்டு இவ்வளவு சிரமப்பட்டீர்களா என கேட்கும் போது எனது வலிகளை,துயரங்களை அப்படியே எழுத்தில் வடித்த தம்பி மணிசெந்திலின் எழுத்தாற்றலை வியந்துக்கொள்வேன்.
அவனின் எழுத்து நடையும், சொற்களை கையாளும் திறனும், மிகவும் நேர்த்தியானவை. என்னை அவனாக உணர்ந்து,என் வலிகளை,துயரங்களை அப்படியே தன் ஆழ் மனதில் உள்வாங்கி , மணி செந்தில் இராபர்ட் பயஸ் ஆகவே மாறி விடுதலைக்கு விலங்கினை தம்பி மணி செந்தில் எழுதினான்.
நாம் தமிழர் கட்சி நடத்த உள்ள சர்வதேச இன எழுச்சி அரசியல் மாநாட்டு வெளியீடாக வெளியாகி உள்ள சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற இக்கட்டுரை தொகுதி அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியினைப் பற்றியும் தம்பி மணி செந்தில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுதியாக வெளிவருகிறது.
அண்ணன் சீமான் பற்றி நான் விவரித்தால் நான் ஒரு புத்தகம் தனியே எழுத வேண்டும். எப்போதும் தமிழின நலனிற்காக முன்கள வீரராக களத்தில் நிற்கும் அண்ணன் சீமான் எம் அன்பிற்குரியவர். அவர் வேலூர் சிறைக்கு வந்து விடுதலையான பின்புதான் எங்களின் வேதனைகளையும்,துயர்க் கதைகளையும் உலகம் அறிந்தது. அவ்வகையில் நாங்கள் அவருக்கு கடன் பட்டவர்கள்.
அண்ணன் சீமான் அவர்களும், அண்ணி கயல்விழி அவர்களும் என் மீது காட்டும் பேரன்பு விலை மதிப்பில்லாதது.. அண்ணனைப் போலவே அண்ணியும் என் மீது பற்றும், அக்கறையும் கொண்டு இருப்பது எனக்கு மிகுந்த ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.
அண்ணன் சீமான் அவர்களின் இனம் சார்ந்த போராட்டங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அண்ணன் சீமான் அவர்களின் இனம் சார்ந்த போராட்டங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அவருக்கு துணையாக நிற்கிற தம்பி மணி செந்தில் உள்ளீட்ட நாம் தமிழர் கட்சியினை சார்ந்த அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள்.
நூல் வெல்லட்டும்.
நூல் வெல்லட்டும்.
-இராபர்ட் பயஸ்
த.கை.எண் 4552
நடுவண் சிறை,புழல்
சென்னை.
த.கை.எண் 4552
நடுவண் சிறை,புழல்
சென்னை.


0 கருத்துகள்:
Post a Comment