naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

15 Jun 2015

திரு.த.மணிவண்ணன் அவர்களின் தந்தை தமிழ்த்திரு.அய்யா கு.தர்மலிங்கம் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு

எனது அன்பான தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
வணக்கம் . தயாரிப்பாளருமான திரு.த.மணிவண்ணன் அவர்களின் தந்தை தமிழ்த்திரு.அய்யா கு.தர்மலிங்கம் அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் (11.6.15)நம் தமிழ் இனத்தின் அடையாளங்களான பெருமைமிகு பெருந்தலைவர்கள் அய்யா நல்லக்கண்ணு ,அய்யா பழ நெடுமாறன்,அய்யா காசி ஆனந்தன்,அண்ணன் சீமான்,அய்யா த வெள்ளையன் ,அய்யா மணியரசன் ,அண்ணன் கோவை கு ராமகிருஷ்ணன்,விடுதலை ராசேந்திரன் ,கி வீரலட்சுமி ,தயாரிப்பாளர் தாணு,கவிஞர் பச்சியப்பன்,அய்யா கி த பச்சையப்பன்,வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி மற்றும் இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோரோடு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் அஞ்சலி செலுத்தியது   திரு.மணிவண்ணன் அவர்களுக்கும் வாழ்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

நிகழ்வின் தொடக்கமாக மகிழினி மணிமாறனின் பறை இசையோடு தொடங்கி அப்பா கு.தர்மலிங்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளை நான் வாழ்க்கை குறிப்புகள் வாசிக்க அய்யா பழ.நெடுமாறன் ,அய்யா நல்லக்கண்ணு அவர்களின் முன்னிலையில் படத்தினை திறந்து வைத்தார் .அய்யா கு தர்மலிங்கம் அவர்களின் வழியில் நின்று தமிழின விடியலுக்காக அயராது உழைத்து கொண்டிருக்கும் திரு த.மணிவண்ணன் அவர்களின் பங்களிப்பை அனைவரும் மனதார பாரட்டியது நெகிழ்விற்குரிய நிகழ்வு.கவிஞர் ஏகாதேசி எழுதி பாடகர் கருணாநிதி பாடிய அப்பாவைப்பற்றிய பாடலான,"அப்பா கைய புடிச்சு நடந்தா....தெரு அழகாக மாறும்" என்கிற பாடல் அனைவரின் கண்களையும் குளமாக்கியது.மொத்தத்தில் அய்யா கு.தர்மலிங்கம் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு தமிழ்தேசிய எழுச்சியாக கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்தில் நடந்து முடிந்தது.இறுதியாக 250கோயம்பேடு வணிக வளாக தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டையும்,எண்பது பெண்களுக்கு புடவைகளும் ,1500பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.எங்கள் அப்பாவின் தமிழ்ப்பற்று ,தமிழ்ப்பணி என்றும் எங்களை இயக்கும்...எம் தமிழ் இனங்கள் விடுதலை அடையும் வரை...






 அன்போடு
வ.கௌதமன்.

14-06-15 அன்று குன்னூரில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ‪#‎தீர்மானங்கள்‬:

 நேற்று குன்னூர் மாவட்ட நாம்தமிழர்கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .  கூட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழ்தாசன்  தலைமையில்

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்ங்கள். 

1) கோத்தகிரி பேருந்து நிலையத்தின் உள்ளே மழைகாலத்தில் குடைபிடித்து நிற்க்கவேண்டிய அவல நிலை .சரிசெய்ய முன்வராத கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறோம். 

2) அரசு வேலைகள் நடைபாதை அமைத்தல் கட்டிடங்கள் கட்டுவம் ஒப்பந்ததாரர்கள் இலாபநோக்கத்துடன் செயல்படுவதால் .இவர்கள் செய்கின்ற வேலைகள் உறுதிதன்மை இல்லாமல் இருக்கிறது விரைவில் பழுதாகிவிடுகிறது .இவர்கள் செய்தவேலைகளை இவர்களை வைத்தே மறுசீரமைப்பு செய்திட தமிழகஅரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


3) குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத நிருவனங்களை கண்டிப்பதோடு .பெயர் பலகைகளில் தமிழை முதன்மை படுத்தவேண்டும் என்று தமிழக அரசு ஆணையை அமுல்படுத்தாத அரசு அலுவலர்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. 


4) தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்க்கு துவங்கிய தமிழக அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு உயர்பதவிகளை வழங்கிட தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


5) தமிழக மக்களின் வாழ்வாதார சுரண்டலான அரசு மது பானக்கூடங்களை உடனடியாக அகற்றிடவும் . எதிர்காலங்களில் மதுவில்லா தமிழகம் உருவாக்கிட பூர்ண மதுவிலக்கை தமிழக அரசு அமல் படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


இதில் 

இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தமிழ் ராவணன் .
மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் திலகவதி . 
குன்னூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் 
.குன்னூர்ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ( எ) வீரப்பன் ஆகியோர் முன்னிலையில் .
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பிரதீப் (எ) தமிழவன் .
மண்டல இணை செயலாளர் ராம் . கலந்துகொண்டனர் . 

இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவு – பேரறிவாளன் பேட்டி!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார் மூலமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று, சில கேள்விகளை பேரறிவாளனிடம் முன் வைத்தது. அதற்கு அவர் கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி: கடந்த 24 ஆண்டு கால சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?
பதில்: பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், சின்ன சின்ன பாதிப்புகளுடன் கூடிய மன அழுத்தத்துடன் சிறை வாழ்வை நகர்த்தி வருகிறேன்.
கேள்வி: சிறைக்குள் மருத்துவ சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா?
பதில்: முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேள்வி: தமிழக அரசு விடுதலை செய்யும் முயற்சியைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றுள்ளதே?
பதில்: வழக்கு விசாரணையின் முடிவு நீதியின் பக்கம் இருக்கும் என நம்புகிறேன். கடந்த காங்கிரஸ் மத்திய அரசு உணர்ச்சி மேலீட்டில் செய்த அதே தவறை தற்போதைய மத்திய அரசு செய்யாது என நம்புகிறேன். மாநில அரசின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
கேள்வி: விடுதலை இல்லாமல் சிறைவாழ்க்கை அனுபவித்து வருவதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: 24 ஆண்டுகால இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை. சிறை, இழப்பையும் தந்தது. நிறைய கற்றும் தந்தது.
கேள்வி: ராஜீவ்காந்தி கொலை விவகாரம் மற்றும் விசாரணையின் போக்கு அரசியலாக்கப்படுகிறதா?
பதில்: ஆம். அதனால் தான் தியாகராஜன் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளே நான் நிரபராதி என கூறிய பின்னரும் எனக்கு விடுதலை, நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

14 Jun 2015

ஒரு வண்டிக் குப்பையை எரிக்க ஒரு தீக்குச்சி போதும்- சீமான் ஆவேசப் பேட்டி.

மே-24 நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு. ”இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக நம்முடைய மாநாடு அமைய வேண்டும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல் 2015 மே 24 -ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் இனத்தின் எழுச்சிக்குப் படை திரட்டி வரவேண்டும்” என அழைக்கிறார் சீமான். மாநாடு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல்.


” உங்களது ஆவேசப் பேச்சுக்கு அச்சாரம் போட்டது யார்?”
”ஆள் பார்த்து பிறந்த பேச்சல்ல இது. நமக்கென ஆள் இல்லையே என்கிற ஆதங்கத்தில் வெடித்த பேச்சு. ஆரம்பத்தில் பெரியாரிய மேடைகளில் சாதாரணனாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். ‘நன்றாகப் பேச வரும்’ என்பதுகூட எனக்கு அப்போது தெரியாது. ஈழப் போர் தீவிரமான சூழலில் தத்தளிப்பு அடங்காமல் தாங்கொணா வேதனையோடு ராமேஸ்வரம் கூட்டத்தில் கதறினேன். துண்டிப்பான பல்லியின் வால் துடிப்பதைப்போல் துண்டாடப்பட்ட நம் சொந்தங்களுக்காக என் வாய் துடித்தது. ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு’ என்றார் அய்யா காசி ஆனந்தன். ‘பேசுகிற போது உன்னுடைய உடல்மொழியைக் கவனித்து வியந்து போனேன்’ என்றார் அப்பா பாலு மகேந்திரா. விடுதலைக்காகப் போராடுகிற ஓர் அடிமையின் குரல் ஆவேசம் கொண்டதாகத்தானே இருக்கும். ஈழ சொந்தங்கள் எல்லா விதத்திலும் நாசமாக்கப்பட்ட வேதனை பொறுக்காமல், நமக்கென யாருமில்லையே என்கிற ஆதங்கம் அடங்காமல், அடிக்கிற போது துடிக்கிற புழுவாகவே ஒவ்வொரு மேடைகளிலும் நிற்கிறேன். இழவு வீட்டு ஒப்பாரியாகவே ஒலிக்கிறது எனது குரல்.”
”உங்களுடைய பேச்சில் நீங்கள் தி.மு.க.வை மட்டுமே திட்டுகிறீர்கள். அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லையே?”
”என்னுடைய எல்லா பேச்சையும் கேட்டிருந்தால் இப்படியொரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுக்குமான மாற்று நாங்கள்தான் எனச் சொல்லும்போதே புரியவில்லையா நாங்கள் அ.தி.மு.க.வையும் எதிர்க்கிறோம் என்று. கொள்கையிலோ கொள்ளையிலோ இந்த இரண்டு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வாக்காளர்களை வளைத்து வைத்திருக்கும் இந்தக் கட்சிகளை அடியோடு வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் இலக்கு. சம தராசாக இருந்தே தத்துவமற்ற இந்த இரண்டு கட்சிகளையுமே நாங்கள் பார்க்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைக் காட்டிலும் அய்யா கலைஞரை நான் அதிகம் திட்டுவதாக உங்களுக்குத் தெரியலாம். அதற்குக் காரணம் இந்த அம்மையாரை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்ததே அய்யா கலைஞரின் கேடுகெட்ட ஆட்சிதானே…”
”திருச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?”
”தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி அச்சாரத்துக்காகப் போடப்படும் வழக்கமான மாநாடு அல்ல இது. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் கூடி நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கிற முடிவு. அடிபட்டும் மிதிபட்டும் கிடந்த தமிழர்கள் தங்களின் வலிமை திரட்டி ‘பகையே வா’ என நெஞ்சு நிமிர்த்தி நிற்க வேண்டிய நேரம் இது. நாம் தமிழர் கட்சி என்பது கட்சியின் பெயர் அல்ல. அது நம் இனத்தின் பெருமைமிக்க அடையாளம் . நம் இனத்தின் எழுச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழாவே திருச்சி மாநாடு.
இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக இந்த மாநாடு அமையும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல் 2015 மே 24 -ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நிச்சயம் இருக்கும்.
சிங்களத் தாண்டவங்கள் மட்டும் அல்லாது அக்கம்பக்க மாநில அதிகார வெறிக்கும் தமிழர்கள் பலியாகும் பரிதாபக் காலம் இது. அடிபட்டே கிடப்பதற்கு நாம் ஒன்றும் அடிமைக்கூட்டம் அல்ல. ஆண்டாண்டு காலமாக பெரு நிலத்தை ஆண்ட தமிழ் மறவர்களின் வம்சாவழிப் பிள்ளைகள். முறிந்து கிடந்த கிளை, நிமிர்ந்து நிற்கும் நேரம் இது!”
”தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருக்கின்றீர்கள். இது எந்த விதத்தில் சாத்தியமாகும்?”
”சாத்தியத்தில் இருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பார்கள். நல்ல மாற்றத்துக்கான தேவை தமிழகத்துக்கு இப்போது அவசியம். தனித்துப் போட்டி என்பது என் விருப்பம் அல்ல. என் நிலத்தின் விருப்பம். சகிக்க முடியாத ஊழலையும், மோசடிகளையும், சமூகக் கேடுகளையும், பாரபட்சங்களையும், தீவினைகளையும் உருவாக்கியதைத் தவிர, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதையும் செய்துவிடவில்லை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியலைக் காணச் சகிக்காமல் ஒவ்வொரு வாக்காளனும் மனதில் கொந்தளிப்போடு ‘மாற்றம் வராதா’ என ஏங்கி அலைகிறான். கலைஞரையும் ஜெயலலிதாவையும் விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தனித்துப் போட்டியிட்டால் பரப்புரை தொடங்கி தேர்தல் முடிவு வரை எத்தகைய இக்கட்டுகளுக்கெல்லாம் நாம் ஆளாகுவோம் என்பது எனக்கும் தெரியும். தற்காலிகத் தோல்விக்கும் பயந்தால் நிரந்தர வெற்றியை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நாலைந்து சீட்டுக்காக கூட்டு வைக்கிற குறுகிய கொள்கை கொண்டவர்கள் நாங்கள் அல்ல. பத்து வாக்கு வாங்கினாலும் ஒரு தமிழனுக்குத் தமிழ்ப் பிள்ளைகள் அளித்த வாக்கு அது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எங்களுக்குத் தேவை அரசியல் மாற்றம். தொடக்கத்திலேயே வெற்றியைக் கண்டுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள் அல்ல நாங்கள். தனித்து நின்று தோற்கத் தயார், ஆனால் தரம் கெட்ட ஆட்சிகளை ஏற்கத் தயார் இல்லை. ஒரு வண்டி குப்பையை எரிக்க ஒரு வண்டி தீக்குச்சிகள் தேவை இல்லை. ஒரு தீக்குச்சி போதும்.

உதயசூரியன், இரட்டைஇலை போன்ற தேர்தல் சின்னங்களை எதிர்த்து வழக்கு– சீமான் அறிவிப்பு.



நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.
அவை பின்வருமாறு:
நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர்
சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர்  ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன்
சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்
 
இயற்கெனவே, பேராவூரணி, சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத்தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம்-1
அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும் அரசியல் புரட்சியினை முன்னெடுத்து தமிழின வரலாற்றில் முதல் முறையாக இன எழுச்சி அரசியல் மாநாட்டினை இரண்டு இலட்சத்திற்கும் மேலான நம் இன உறவுகளைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மாநாட்டின் மகத்தான வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உறவுகளுக்கும், வியர்வைத்துளியினை உதிரமாக சிந்தி தாங்கள் சிறுகச்சிறுகச் சேர்த்த பொருளை நன்கொடையாக கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்-2
தமிழ்நாட்டு சிறைக்கூடங்களில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடுகின்ற சிறைவாசிகளை நன்னடத்தை, உடல்நிலை, வயது போன்ற காரணங்களை கொண்டு சிறைவிதிகளின்படி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அகதிகளாக வாழ்வுரிமை தேடி தமிழகம் வந்த ஈழ உறவுகளை எவ்வித விசாரணையுமின்றி சித்திரவதை செய்து தனிமைச்சிறையில் அடைத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கிற வதை முகாம்களை உடனடியாக மூட வலியுறுத்தியும் வருகிற சூலை 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் முக்கியச்சிறைச்சாலைகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புழல் ஆகிய நடுவண் சிறைச்சாலைகளை நாம் தமிழர் கட்சி முற்றுகையிடுகிறது. அந்தப் போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்-3
இந்தியத்தேர்தல் நடைமுறை என்பது மிகவும் சனநாயகமற்ற முறையில் உள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சி நடத்தி வருகிற பெரிய கட்சிகளுக்கு சார்பாக ஒருதலைபட்சமாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக ஒரே சின்னத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் பெரும்பாலான பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதும், புதிதாக சனநாயக உரிமையின்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிதாகச்சின்னங்களைக் கொடுத்து தேர்தலில் நிற்கச்சொல்வதும், மிகப்பெரிய சனநாயகப்படுகொலையாகும். சின்னம் ஒதுக்குதல் என்ற நடைமுறையை அறவே நீக்கி மேலைநாடுகளில் உள்ளதுபோல், எண்களையோ, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது மற்றும் தேர்தல் சின்னங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொள்வதோடு, இந்த சமநிலையற்ற, சனநாயகத்துக்கு முரணான தன்மையை எதிர்த்து உரிய நீதிமன்றத்தை நாடுவது எனவும் இப்பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.
தீர்மானம்-4
தமிழர் இன வரலாற்றில் ஒருபோதும் திராவிட, இந்தியத்தேசியக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை நாம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பணநாயகத்தை வீழ்த்தி சனநாயகம் காப்போம்’, ‘எமது அதிகாரம் மக்களுக்கானது’. ஊழல், இலஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பண்பாட்டு சீரழிவு, பெண்ணடிமை, மொழிச் சிதைவு, சாதிய இழிவு, தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, வர்க்க வேறுபாடு இவைகள் எதுவுமற்ற முழுமையான உண்மையான, நேர்மையான மக்களாட்சி அமைக்க, நிலவளம், நீர்வளம், காட்டு வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் காக்க, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக பொதுமையில் வைக்க, தாய்மொழி கல்வி போற்ற, பொருளாதார, அரசியல், சமூக நீதி ஆகியவற்றைக் காத்திட, மாற்று அரசியலை முன்வைத்து, ‘மக்களிலிருந்து நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்’. ‘இந்த மண்ணை, மக்களைக் காக்க வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை! உங்கள் வயிற்றிலிருந்து வந்த பிள்ளைகள்’ என்பதனை உணர்ந்த எமது மக்களைச் சந்திக்க வருகிற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்கிறோம் என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ‘2016-இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு’ என்ற உயரிய நோக்கத்தோடு நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்கிறது. இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. திராவிட, இந்தியத் தேசியக் கட்சிகளுக்கோ இது மற்றுமொரு தேர்தல். மாற்றத்தை எதிர்நோக்கி படைதிரட்டி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கோ இது போர்க்களம் என இந்தப்பொதுக்குழு பிரகடனம் செய்கிறது.

பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

அவை பின்வருமாறு:
நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர்
சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன்
சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்
இயற்கெனவே, பேராவூரணி தொகுதிக்கு திலீபன் அவர்களும், சிங்காநல்லூர் தொகுதிக்கு பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்-1
அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும் அரசியல் புரட்சியினை முன்னெடுத்து தமிழின வரலாற்றில் முதல் முறையாக இன எழுச்சி அரசியல் மாநாட்டினை இரண்டு இலட்சத்திற்கும் மேலான நம் இன உறவுகளைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மாநாட்டின் மகத்தான வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உறவுகளுக்கும், வியர்வைத்துளியினை உதிரமாக சிந்தி தாங்கள் சிறுகச்சிறுகச் சேர்த்த பொருளை நன்கொடையாக கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-2
தமிழ்நாட்டு சிறைக்கூடங்களில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடுகின்ற சிறைவாசிகளை நன்னடத்தை, உடல்நிலை, வயது போன்ற காரணங்களை கொண்டு சிறைவிதிகளின்படி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அகதிகளாக வாழ்வுரிமைத்தேடி தமிழகம் வந்த ஈழ உறவுகளை எவ்வித விசாரணையுமின்றி சித்திரவதை செய்து தனிமைச்சிறையில் அடைத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கிற வதை முகாம்களை உடனடியாக மூட வலியுறுத்தியும் வருகிற சூலை 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் முக்கியச்சிறைச்சாலைகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புழல் ஆகிய நடுவண் சிறைச்சாலைகளை நாம் தமிழர் கட்சி முற்றுகையிடுகிறது. அந்தப் போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-3
இந்தியத்தேர்தல் நடைமுறை என்பது மிகவும் சனநாயகமற்ற முறையில் உள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சி நடத்தி வருகிற பெரிய கட்சிகளுக்கு சார்பாக ஒருதலைபட்சமாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக ஒரே சின்னத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் பெரும்பாலான பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதும், புதிதாக சனநாயக உரிமையின்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிதாகச்சின்னங்களைக் கொடுத்து தேர்தலில் நிற்கச்சொல்வதும், மிகப்பெரிய சனநாயகப்படுகொலையாகும். சின்னம் ஒதுக்குதல் என்ற நடைமுறையை அறவே நீக்கி மேலைநாடுகளில் உள்ளதுபோல், எண்களையோ, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது மற்றும் தேர்தல் சின்னங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொள்வதோடு, இந்த சமநிலையற்ற, சனநாயகத்துக்கு முரணான தன்மையை எதிர்த்து உரிய நீதிமன்றத்தை நாடுவது எனவும் இப்பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.

தீர்மானம்-4
தமிழர் இன வரலாற்றில் ஒருபோதும் திராவிட, இந்தியத்தேசியக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை நாம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பணநாயகத்தை வீழ்த்தி சனநாயகம் காப்போம்’, ‘எமது அதிகாரம் மக்களுக்கானது’. ஊழல், இலஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பண்பாட்டு சீரழிவு, பெண்ணடிமை, மொழிச் சிதைவு, சாதிய இழிவு, தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, வர்க்க வேறுபாடு இவைகள் எதுவுமற்ற முழுமையான உண்மையான, நேர்மையான மக்களாட்சி அமைக்க, நிலவளம், நீர்வளம், காட்டு வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் காக்க, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக பொதுமையில் வைக்க, தாய்மொழி கல்வி போற்ற, பொருளாதார, அரசியல், சமூக நீதி ஆகியவற்றைக் காத்திட, மாற்று அரசியலை முன்வைத்து, ‘மக்களிலிருந்து நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்’. ‘இந்த மண்ணை, மக்களைக் காக்க வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை! உங்கள் வயிற்றிலிருந்து வந்த பிள்ளைகள்’ என்பதனை உணர்ந்த எமது மக்களைச் சந்திக்க வருகிற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்கிறோம் என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ‘2016-இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு’ என்ற உயரிய நோக்கத்தோடு நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்கிறது. இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. திராவிட, இந்தியத் தேசியக் கட்சிகளுக்கோ இது மற்றுமொரு தேர்தல். மாற்றத்தை எதிர்நோக்கி படைதிரட்டி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கோ இது போர்க்களம் என இந்த பொதுக்குழு பிரகடனம் செய்கிறது

அதிமுக வோடு கூட்டணி இல்லை என்று சொன்னதால் சீமான் மீது வழக்குப் போடுவதா? பெ.மணியரசன் கண்டனம்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதும்
40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு,
அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார், அவருடைய அறிக்கையில்…..

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும், மற்றும் அக்கட்சித் தோழர்கள் 40 பேர் மீதும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 124A, 143, 153A, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

கடந்த மே 24 அன்று, திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டில் அவர்கள் பேசியதற்காக, இவ்வழக்கு போடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த சனநாயக விரோத நடவடிக்கைக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாக அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழின உணர்வாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் முடிவெடுத்து, வரிசையாக இவ்வாறு வழக்குகளை போட்டு வருகிறது. ஆர்ப்பாட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுத்து வருகிறது.

செண்பகவல்லி அணைக் கோரிக்கைக்காக, 31.05.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடைசி நேரத்தில், 30.05.2015 அன்று மாலை 4 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன், திருச்சி – திருவெறும்பூரில், 06.05.2015 அன்று நடைபெறவிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் 20 தமிழர்களைக் கடத்தி சுட்டுக் கொன்றதற்கு கண்டனச் சுவரொட்டி போட்டதற்காக, இ.த.ச. 153A, TNOPPD (3) பிரிவுகளின்படி, என் மீதும், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் மீதும் வழக்குப் பதிவு செய்து, தோழர் கவித்துவனை சிறையில் அடைத்தார்கள்.

இப்பொழுது, நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பேசியதற்காக அக்கட்சி நிறுவனர் மீதும், மற்ற பொறுப்பாளர்கள் மீதும் கடுமையான பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

தோழர் சீமான் பல ஆண்டுகளாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் இன உரிமைகள் குறித்து பேசி வரும் பேச்சைத்தான் திருச்சி மாநாட்டிலும் பேசியுள்ளார். அப்பொழுதெல்லாம், அ.இ.அ.தி.மு.க. அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.இ.அ.தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைப் பெற்று, அதன் தேர்தல் பரப்பரைக்கு தோழர் சீமானின் சொற்பொழிவை பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி மாநாட்டில், அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வோடும் அ.இ.அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இப்பொழுது இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிராக பகையுணர்ச்சியைத் தூண்டக் கூடிய பேச்சு என்று குற்றம்சாட்டி 124A பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை (AIADMK Government) விமர்சிப்பதை அரசைக் (State) கவிழ்க்கக் கூடிய நோக்கம் கொண்டதாகக் கருத முடியாது. ஆட்சி குறித்த விமர்சனங்களையெல்லாம் 124A-வாகக் கருதினால் கருத்துரிமை என்பது கடுகளவும் இருக்காது.

வெள்ளைக்காரன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலனிய ஆதிக்கத்திற்கு உகந்த எதேச்சாதிகாரப் பிரிவான 124A பிரிவை, விடுதலை பெற்ற இந்தியாவில், தண்டனைச் சட்டத்தில் வைத்திருப்பதே இந்திய அரசமைப்புச் சட்ட விதி 19க்கு நேர் எதிரானதாகும். அது நீக்கப்பட வேண்டிய பிரிவு! அந்தப் பிரிவைப் பயன்படுத்தி, அ.இ.அ.தி.மு.க. அரசு தோழர் சீமான் மீதும் மற்ற தோழர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது சனநாயக விரோதச் செயலாகும்; பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகும்.

124A பிரிவைப் போலவே, 153A பிரிவும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வர்ண சாதி ஆதிக்கத்தை பற்றியும், பறிபோகும் தமிழர்கள் உரிமைகள் குறித்தும் பேசினால் கூட, பழிவாங்குவதற்காக இந்த 153A-வை பயன்படுத்த முடியும். ஏனெனில், பல்வேறு மொழி, இன, மத, சமூக மக்களிடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி இந்த 153A பிரிவின் கீழ் வழக்குப் போட முடியும்.
ஒருவர் மத – இன மோதல்களை உண்டாக்கும் வகையில் உண்மையிலேயே ஒருவர் நடந்து கொண்டிருந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 505(2) இருக்கிறது. எனவே, இந்த 153A என்பது அரசியலில் தங்களுக்கு ஆகாதவர்களைப் பழிவாங்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
காவல்துறை அனுமதியோடு அமைதியாக நடந்து முடிந்த மாநாடு குறித்து, சட்ட விரோதமாகக் கூடியக் கூட்டம் என்றும் அரசு அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாத நடவடிக்கை என்றும் (143, 188) போட்டிருப்பதும் போலிக் குற்றச்சாட்டுகளே!
அ.இ.அ.தி.மு.க. அரசு அண்மைக்காலமாக தமிழின உணர்வாளர்களை தமிழ்த் தேசிய அமைப்புகளை பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் போடுவது, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஆகிய சனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும் மற்றுமுள்ள 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார், இப்போது தேவையில்லையா? – சீமான் காட்டம்.


கருணாநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவை சீமான் விமர்சிப்பதில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தல் நேரத்தில் தேவைப்பட்ட பிரபாகரன் இப்போது தேவையில்லாமல் போய்விட்டாரா? என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார் சீமான். இது தொடர்பாக அவர் சொன்ன பதில் ….
”வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள். இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்.”

இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.

புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்….
முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல் பற்களுக்கு இடையில இடைவெளி இருக்கும்….
இரண்டாவது படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட தலைவரோட படம் ….இதுல பற்களுக்கு இடைல இடைவெளி இருக்காது ….
மூன்றாவது படத்துலயும் இடைவெளி இருக்காது….
தலைவர் சின்ன வயசுல வெடிவிபத்துல கால்ல காயம்பட்டு கால் கருத்துப்போனதால “கரிகாலன்” னு பேரு வந்துச்சு அந்த கருப்பான கால் எங்க…? இந்த படத்துல அதெல்லாம் ஒன்னும் இல்ல….
மிக நீண்ட நாள் ஆய்வில் கிடைத்த தகவல் இதை சிலர் வியப்பாக பார்க்கலாம் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகிருந்த முக்கிய போராளி ஒருவரின் வாய் முறைப்பாடு காரணம் இறந்தால் என்பதற்கு அப்பால் உடற் கூற்று அங்க அடையாள ஆய்வுகள் சான்றாயின
விடுதலைப் புலிகளன் தலைவரின் உடற் கட்டமைப்பை ஒத்த ஒரு இராணுவச் சிப்பாய் இராணுவத்தில் இருந்ததை பல இராணுவ வீரர்கள் அறிவார்கள் அவர்களுக்கு இதில் இறந்துள்ளது யார் எனப் புரியும்
சிங்களவர்கள் இறந்துவிட்டார்கள் எனக் கூறுவதற்கு முன்பு பல தமிழர்கள் இறந்துவிட்டார் என்றனர் மிகவும் சிக்கலான வினா, ஒன்று மட்டும் உண்மை இதில் உள்ள உடலம் விடுதலைப் புலிகளின் தலைவருடையது அல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் மூத்த போராளி உறுதிப் படுத்தினார் நீண்ட நாள் வினாவிற்கு ஒரு செய்தி.
இவ் விடயத்தை கருணா மற்றும் தயா மாஸ்ரர் நன்கறிவர் அத்துடன் உடலைப் பார்த்த பின் கருணா கூறிய கூற்றுக்களும் அப்படி அமைந்தது.




13 Jun 2015

சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்.



ஏற்கெனவே சென்னையில் எடுத்த படம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

  தெற்காசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய உறுப்பினர் சரஸ்வதி தலைமை வகித்துப் பேசியதாவது:
  இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 70 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம், அங்குள்ள தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை.
  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சூழல் மாறவில்லை. தற்போது, அங்கு பதவியில் உள்ளோர் பலரும் உள்நாட்டுப் போரில் தொடர்புள்ளவர்கள் தான்.
  அங்குள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்காக, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும். தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 10 லட்சம் கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளோம். இந்த கையெழுத்துப் பிரதிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
         இதில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மதுரைக் கல்லூரி முதல்வர் முரளி, மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே. ராமசாமி, திரைப்பட இயக்குநர் வீரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

11 Jun 2015

சீமான் -உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம்.


வேலூர் சிறைச்சாலை நீண்ட வரலாறுகளை கொண்டது. அதன் நெடிய சுவர்கள் பழம் பெருமை உடையன. ஆனால் எம்மைப் போன்றவர்களுக்கு அச்சிறை நெருக்கடிகளையும்,சோதனைகளையும் தந்தாலும், நெஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் நினைவுகளையும், உயிராய் உடனிருக்கும் உறவுகளையும் தந்த இடமாகும். ஆம். அங்குதான் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அண்ணன் சீமான் அவர்கள் இருந்த போது அவரை பார்க்க வந்த தம்பி மணி செந்திலை சந்தித்தேன். பார்ப்பதற்கு மிக எளிமையாக, அமைதியாக இருந்தாலும் அவனிடம் இனம் காக்க போராடும் மன உறுதியும்,உண்மையான தமிழுணர்வும் தென்பட்டன. தம்பி மணி செந்தில் மிகுந்த அன்புடையவன். பழகியவர்களுக்கு தெரியும். அவனை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது. பார்த்த முதல் பார்வையிலேயே அவனும் ,நானும் நெருக்கமான அண்ணன்,தம்பிகளாகி விட்டோம்.
அண்ணன் சீமான் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் தம்பி மணி செந்தில் எழுதிய கட்டுரைகளை உற்சாகமாக பாராட்டி விட்டு எங்களுக்கும் படிக்கத்தருவார். அவனது கருத்தாழம் மிக்க எழுத்துக்களை கண்ட போது எனது வாழ்க்கையை,என் வலிகளை தம்பி மணி செந்தில் மூலமாகத்தான் பதிவு செய்திட வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படியாக பிறந்ததுதான் எனது வாழ்க்கை பதிவான “விடுதலைக்கு விலங்கு “
எமது வழக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நான் அனுபவித்த கடும் சித்ரவதைகளையும், என் வாழ்க்கையின் ரத்தம் தோய்ந்த பக்கங்களையும் தம்பி மணி செந்திலிடம் நான் விவரித்தேன், கண்கலங்கிக் கேட்டுக் கொண்டிருந்த அவன் காரியத்தில் இறங்கினான். நான் விவரித்ததை ரத்தமும்,சதையுமாக தன் எழுத்தில் வந்து நிறுத்தி என்னோடு ஒருவனாய் கலந்தான் தம்பி மணிசெந்தில்.
யாராவது விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து விட்டு இவ்வளவு சிரமப்பட்டீர்களா என கேட்கும் போது எனது வலிகளை,துயரங்களை அப்படியே எழுத்தில் வடித்த தம்பி மணிசெந்திலின் எழுத்தாற்றலை வியந்துக்கொள்வேன்.
அவனின் எழுத்து நடையும், சொற்களை கையாளும் திறனும், மிகவும் நேர்த்தியானவை. என்னை அவனாக உணர்ந்து,என் வலிகளை,துயரங்களை அப்படியே தன் ஆழ் மனதில் உள்வாங்கி , மணி செந்தில் இராபர்ட் பயஸ் ஆகவே மாறி விடுதலைக்கு விலங்கினை தம்பி மணி செந்தில் எழுதினான்.
நாம் தமிழர் கட்சி நடத்த உள்ள சர்வதேச இன எழுச்சி அரசியல் மாநாட்டு வெளியீடாக வெளியாகி உள்ள சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற இக்கட்டுரை தொகுதி அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியினைப் பற்றியும் தம்பி மணி செந்தில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுதியாக வெளிவருகிறது.
அண்ணன் சீமான் பற்றி நான் விவரித்தால் நான் ஒரு புத்தகம் தனியே எழுத வேண்டும். எப்போதும் தமிழின நலனிற்காக முன்கள வீரராக களத்தில் நிற்கும் அண்ணன் சீமான் எம் அன்பிற்குரியவர். அவர் வேலூர் சிறைக்கு வந்து விடுதலையான பின்புதான் எங்களின் வேதனைகளையும்,துயர்க் கதைகளையும் உலகம் அறிந்தது. அவ்வகையில் நாங்கள் அவருக்கு கடன் பட்டவர்கள்.
அண்ணன் சீமான் அவர்களும், அண்ணி கயல்விழி அவர்களும் என் மீது காட்டும் பேரன்பு விலை மதிப்பில்லாதது.. அண்ணனைப் போலவே அண்ணியும் என் மீது பற்றும், அக்கறையும் கொண்டு இருப்பது எனக்கு மிகுந்த ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.
அண்ணன் சீமான் அவர்களின் இனம் சார்ந்த போராட்டங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அவருக்கு துணையாக நிற்கிற தம்பி மணி செந்தில் உள்ளீட்ட நாம் தமிழர் கட்சியினை சார்ந்த அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள்.
நூல் வெல்லட்டும்.
-இராபர்ட் பயஸ்
த.கை.எண் 4552
நடுவண் சிறை,புழல்
சென்னை.

10 Jun 2015

மியன்மார் முஸ்லிம்களுக்காக முஸ்லிம் கட்சிகள் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி செய்வது நன்றிக்குரியது….முபாரக் மவ்லவி


(எஸ்.அஷ்ரப்கான்)

பௌத்த பயங்கரவாதிகளால் மிக மோசமாக
துன்புறுத்தப்படும் மியன்மார் முஸ்லிம்களுக்காக
இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை
உலமா கட்சி வரவேற்றுள்ளதுடன் இலங்கையின்
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்
கட்சிகள் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி
செய்வது நன்றிக்குரியது என உலமா
கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்துள்ளார். இது பற்றி அவர்
தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதமம் என்பது மதங்களை அடிப்படையாக
கொண்டிருந்தாலும் சரி, சித்தாந்தங்களை அடிப்படையாக
கொண்டிருந்தாலும் சரிவை அது துடைத்தெறியப்பட
வேண்டும். ஆயுத போராட்டம் என்பது ஆயுதம்
தூக்கியோருக்கெதிராக இருக்க வேண்டுமே தவிர அப்பாவி
பொது மக்களுக்கெதிராக அல்ல. இதனை புரிந்து
கொள்ளாமையே விடுதலைப்புலிகளின் படு தோல்விக்கும்,
மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கும் காரணமாக
அமைந்தது. இவ்வாறானதொரு பயங்கரவாதமே
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
உலகமெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டன. ஆனால் இலங்கை
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துக்கொண்டு
அமைச்சர்களாக வலம் வந்து முஸ்லிம்களை
ஏய்த்துப் பிழைக்கும் முஸ்லிம் கட்சிகள் இந்த
நாட்டில் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தைக்கூட ஏற்பாடு
செய்யவில்லை. யாரோ சிலர் ஏற்பாடு செய்த
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ரிசாத் முட்டையிட்டார்.
அமைச்சர் ஹக்கீமோ இன்னமும் தூக்கத்திலேயே வாய்
புலம்பிக்கொண்டிருக்கிறார். பேருவல சம்பவத்தின்
போதும் இவ்வாறுதான் இவர்கள் இருந்ததோடு
வாய்ப்பேச்சில் வீரனாக மட்டுமே தம்மை
காட்டிக்கொண்டனர். கிழக்கு மக்கள் தாமாகவே
இவற்றுக்கெதிராக ஹர்த்தால் நடத்தினர்.
அத்தகைய கிழக்கு மக்கள் இந்த சுயநல
முஸ்லிம் தலைமைகளுக்கெதிராக கொதித்தெழ வேண்டும்.
இந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் மியான்மார்
முஸ்லிம்களுக்கான அக்கறைக்காக உலமா கட்சி
தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

தலைவர் பிரபாகரன் சிலையை மீண்டும் அதேஇடத்தில் நிறுவுவோம்: சீமான் சீற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: 
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் ஐயனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள். 
தமிழ் உணர்வாலும் தலைவர் மீது கொண்ட பற்றாலும் தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் நிறுவியிருந்த சிலையைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். 
குல தெய்வம் ஐயனார் இன தெய்வம் பிரபாகரன் என எண்ணியே தலைவர் பிரபாகரனுக்கு அங்கே சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 
இதை அப்புறப்படுத்த காவல் துறைக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது. 
தமிழ்த் தேசிய இனத்தின் வீரமிகு அடையாளமாக, வரலாற்று வடிவமாக, காலம் தந்த கம்பீரமாக மேதகு தலைவர் பிரபாகரனை மனதில் ஏந்தி நிற்கும் தமிழ்ப் பிள்ளைகள் தங்களின் உடல் சதையில் அவருடைய உருவத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். 
உள்ளத்தில் மட்டும் அல்லாது தங்கள் இல்லத்திலும் வரவேற்பு அறையில் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்கிறார்கள். 
பார்க்கிற போதெல்லாம் வீர உணர்வு கொள்ள அலைபேசி முகப்பிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் தலைவர் பிரபாகரன் படத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். 
இல்லத்து நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களிலும் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் தலைவர் படத்தைப் பிரசுரித்து உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். 
நிலத்தில் நிறுவப்பட்டிருந்த தலைவரின் சிலையை அகற்றியவர்களால் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணத்தை என்ன செய்ய முடியும்? 
தலைவர் பிரபாகரனின் படத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் எதனால் உருவானது? 
யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் உருவாக்கிய தலைவரின் சிலையால் என்ன சட்டம் ஒழுங்கு சிக்கல் வந்தது? 
காவல்துறை பெரிய படையாகக் கிளம்பிப்போய் தலைவர் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த நிர்ப்பந்தித்தது யார்? 
எவ்விதக் காரணமும் இல்லாமல் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியிருப்பது ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உணர்வுகளையும் ஊனமாக்கும் செயல். 
சாதி மதங்களாகப் பிளந்து, தாழ்வு மனப்பான்மையால் ‘நம்மால் எதுவும் முடியாது’ என முடங்கிப்போய் தாழ்ந்து கிடந்த தமிழ் மக்களின் இழிநிலையை மாற்றி நம்மால்தான் முடியும் என்கிற போர்க் குணத்தையும் தமிழுணர்வையும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஊட்டி, நெஞ்சுரத்தோடு நிமிர வைத்தவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். 
அவர் வழி பரவும் உணர்வுகள் ஒருமித்த எழுச்சியாகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய ஒடுக்குதல் நடவடிக்கைகளை அரசுத் தரப்பு பாய்ச்சி வருகிறது. 
தமிழ்ப் பிள்ளைகளின் பேச்சுக்கும் செயலுக்கும்தான் தடைபோட முடியும். ஆனால், அவர்களின் சிந்தனைக்கும் கனவுக்கும் தடை போட இந்த அரசால் எப்படி முடியும்? 
உச்சபட்ச போர்க் கொடூரமாக வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை இடித்த சிங்கள அதிகாரிகளுக்கும் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்த தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. 
ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு தலைவர் பிரபாகரன் சிலையை நிறுவிய இடத்திலேயே மறுபடியும் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், அதே இடத்தில் தலைவர் பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

தீமோர் தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்- சீமான்

இந்தோனேசியா அருகே தீமோர் தீவில் தவிக்கும் 54 ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். 

தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்