naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

23 Nov 2014

நாம் தமிழர் கட்சி சவூதி அரேபிய கட்சி தோழர்களின் சார்பாக வரும் நவம்பர் 26ம் தேதி தலைவரின் 60ம் ஆண்டு பொன் விழா

நாம் தமிழர் கட்சி சவூதி அரேபிய கட்சி தோழர்களின் சார்பாக வரும் நவம்பர்26ம் தேதி தலைவரின் 60ம் ஆண்டு பொன் விழா மிக சிறப்பாக கொண்டாடபட இருக்கிறது. அன்று அந்த அந்த மாநில தோழர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் குறுதிகொடை செய்வார்கள் , மேலும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை ஒட்டி ஒரு நாள் அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும், மாவீர்ர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்படும் ,
அந்த அந்த பகுதி பொருப்பாளர்கள் இந்த நிகழ்வுகளை முன்னேடுப்பார்கள். 
ஜித்தா - தமிழன் சாகுல், நெஸ்டர் தமிழன், கவிமனி தமிழன், 
ரியாத்- வைரவேல், சிவா தமிழன்.
தமிழராக தமிழரின் நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்போம் சவூதி வாழ் தமிழர்களே .

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் குருதி கோடை முகம் மற்றும் மருத்துவ முகம்

திருவள்ளூர்  நடுவண்  மாவட்டம்  நவம்பர்  26  தேசிய  தலைவர்  60 பிறந்தநாள்  முனிட்டு  23/11/2014 இன்று  மாபெரும்  குருதி  கோடை  முகம்  மற்றும்  மருத்துவ  முகம்



காஞ்சியில் தலைவர் பிறந்த நாள் நிகழ்வுகள்


இன்று  ( 23.11.2014 ) தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மண்டலத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகள்

1) குருதிக்கொடை முகாம் ( துரைபாக்கம் 200 அடி சாலை )
2) குருதிக்கொடை முகாம் ( கந்தன்சாவடி ஆதி பராசக்தி மண்டபம் )
3) குருதிக்கொடை முகாம் ( கேளம்பாக்கம் சந்திப்பு )
4 ) குருதிக்கொடை முகாம் ( தாம்பரம் எஸ் ஜி எஸ் மண்டபம் )
6 ) மரம் நடும் விழா ( காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் )
7 ) அன்னதானம் ( கேளம்பாக்கம் சமூக நலக்கூடம் )

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை முகாம் .

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் தலைவரின் 60வது அகவையை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் உறவுகள் அனைவரும் பங்கெடுப்போம் நாம் தமிழராய்..

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக, தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொரட்டூரில் நடந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.

22 Nov 2014

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இரத்ததானம் முகாம் தொடங்கியது

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தலைவரின் 60வது பிறந்தநாளை  முன்னிட்டு மாபெரும்  இரத்ததானம் முகாம் தொடங்கியது



வி.களத்தூரில் இன்று சீமை கருவேலமரங்களின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது!


இன்று (4-11-2014) காலை 10 மணி அளவில் வி .களத்தூரில் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி - வி .களத்தூர் கிளை சார்பாக சீமை கருவேலமரங்களின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

வழங்குபவர் :
மு .ஜலால்லு தீன்(நாம் தமிழர் கட்சி-வ.களத்தூர் கிளை தலைவர் ) , இஸாக் (செயலாளர் ) மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்கள். வரும் திங்கள் கிழமை அன்று பெரம்பலூர் மாவட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது அவர்களிடம் சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்றுவதற்கு மனு கொடுப்பதாக உள்ளது .
படம் : வி .களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்.


  
 




தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, ‘வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்’ பொதுக்கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது

தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, ‘வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்’ தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22-11-14 அன்று வேளச்சேரியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது.


18 Nov 2014

முதன்மைக் கொள்கைகள்

1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!


2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் !
தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!


3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை
தேசிய இனங்களின் பிறப்புரிமை !
இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக
அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!


4)தமிழை எங்கும் வாழவைப்போம்!
தமிழனையே என்றும் ஆளவைப்போம்!


5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட
தற்போதுள்ள கூட்டுறவு முறையை
மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.


6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும்
மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்!


7)இயற்கைக்கு உகந்த வகையில்
பெரும்பான்மை மக்களுக்கேற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்!
தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்!


8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து
தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்!


9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம்
பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்!


10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும்
வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்!


11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம்!
சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்!
சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்!
தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!


12)மகளிருக்குச் சமபங்கு
அளிப்பது பிச்சையல்ல! – அதை
அடைவது பிறப்புரிமை! – அதற்காகப் பாடுபடுவோம்!


13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!
தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!


14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி
பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே
வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!


15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை
உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்!


16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது!
ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!


17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்!
கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்


18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம்
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்
தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்!


19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம்
அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்!


20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்!
கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!


21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர்
வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!


22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம்!
அனைத்து மருத்துவ வசதிகளும்
அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்!


23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு
உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட
தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்!
(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.


24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி
உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்!


25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நிதீமன்றம்!
நிதீமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்!


26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம்
வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!

தொடர்புக்கு..

முகவரி:

                                           நாம் தமிழர் தலைமையகம்,
                                           கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
                                           செந்தில் நகர்,
                                           போரூர்,சென்னை – 600 116.

மின்னஞ்சல்:            naamtamizhar@gmail.com

 தலைமை அலுவலக தொடர்புக்கு     +91 44 24769070
                                                                              +91 44 24769080
 சர்வதேச தொடர்புக்கு :     +1 315 557 6500

இணையதள தொடர்புக்கு :     naamtamizhar@gmail.com

என்னை தொடர்பு கொள்ள :    jalalvkr@gmail.com
போன் :                                              081242 66273


















.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்