naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

30 Nov 2014

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி யேர்மனியில் DORTMUND நகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.

நண்பகல் 12.45 மணியளவில்  பொதுச்சடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.

உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க  மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது.

அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும்  தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.

சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. 

மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக் கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழீழம் இசைக்குழுவினரால்  மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என் பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிட முடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது.

மண்டப மேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன.

தொடர்ந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடர வேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப் போவதில்லை என்பதையம் வலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.

தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள், எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டிய நாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம்  என்றும் உறுதி கூறப்பட்டது.

இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.

எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்து கொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்  பாராட்டினர்.

அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெற வேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.











புலம்பெயர் நாடுகளிலும், இந்தியாவிலும், தாயகத்திலும் உள்ள மக்கள் வீர மறவர்களை நினைவு கூர்ந்தனர்.

29 Nov 2014

இந்திய இறையாண்மையை மீறிய இளங்கோ கைது

news
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி  போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கு ஆதரவாக தங்கச்சிமடத்தில் கடந்த 9 திகதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு உரையாற்றிய மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ இந்திய இறையாண்மைக்கு எதிராக  பேசியதாக இன்று வழக்கு பதிவு செய்த தங்கச்சிமடம் பொலிசார் காலையில் அவரை கைது செய்து இராமேஸ்வரம் கோவில் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்



யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழக விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம் என பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டவர் விசாரணை யின் போது கூறினார் என யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதியன்று மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வைத்து அதேயிடத்தினைச் சேர்ந்த வீரசிங்கம் திலக்சனன் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தினம் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களினை வைத்திருந்தார்  என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞனின் வீடும் சல்லடை போட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பினர் தேடுதல் நடத்தியதோடு வீட்டில் காணப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணனிகள் என்பவற்றினையும் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட திலக்சனை யாழில் உள்ள ரி.ஐ.டியினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்குட்படுத்தியிருந்தனர்.

இவ் விசாரணையின் போதே அவர் யாழ்ப்பாணத்தவர்களின் கலாசார சீரழிந்து செல்வதால் அவர்களை திருத்த முயலவே விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் செயற்படவுள்ளது என துண்டுப் பிரசுரங்களினை அச்சிட முயற்சித்தோம் என தெரிவித்ததாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை இளைஞன் நேற்று முன்தினம் இரவு கொழும்பு 6 ஆம் மாடிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என வலம்புரிக்கு தெரிய வந்துள்ளது.
 

அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம்.
அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம்.
உத்திர பிரதேசத்தில் மீண்டும் சங்க பரிவாரத்தின் கலவர திட்டம். முசாஃபர் நகர் கலவரக் காட்சிகள் இம்முறை அலிகாருக்கு மாற்றம்.
அலிகார் முசுலீம் பல்கலைக்கழக வாயில் முன்பு, “ஜாட் ராஜா – மகேந்திர பிரதாப் சிங்கின் பிறந்த நாளை, டிசம்பர் 1 கொண்டாடுவதாக” பாரதிய ஜனதா அறிவித்திருக்கிறது. இவ்வறிவிப்பை வெறுப்பை உமிழும் எரிபொருள் என்று மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எதிர்த்திருக்கிறது.
ஆனாலும் மாநிலத்தை ஆளும் கட்சியை விட மத்தியை ஆளும் கட்சியின் பலம் பெரிதல்லவா! அதுவே பாஜக என்றால்….?
‘ஜாட் அரசனி’ன் பிறந்த நாளை திடீரென கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
உபி பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய்
உபி பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய்
இந்த புண்ணிய அறிவிப்பை வெளியிட்டவர் பாஜக தலைவர் லக்ஸ்மிகாந்த் பாஜ்பாய். “அலிகார் முசுலீம் பல்கலைக்கழக நிறுவனர் நாளை சர் சையத் நாள் என்று கொண்டாடுவது போல, பல்கலை கட்ட நிலம் கொடுத்த ராஜா மகேந்திரனின் பிறந்த நாளை கொண்டாடுவதில் என்ன தவறு” என்று கேட்கிறார். இதற்காகவே அவர் கடந்த வாரம் அலிகாருக்கு விஜயம் செய்து உள்ளூர் கட்சி கிளையை தயாராகுமாறு உத்திரவிட்டிருக்கிறார்.
இதை முதலமைச்சர் அகிலஷ் யாதவ் எதிர்த்திருப்பதையெல்லாம் அவர் சட்டை செய்யவில்லை. “எந்த அரசு குறித்தும் எனக்கு பயமில்லை. பல்கலை அரங்கினுள்ளே ஜாட் ராஜா பிறந்த நாளை கொண்டாடுவது நடந்தே தீரும்” என்கிறார். மோடி அரசின் கைங்கரியத்தில் இந்த சவடால் ஒன்றும் வெற்று முழக்கமாகி விடாது.
சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ சமீருல்லாகான் “ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் பகைமை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, முசாஃபர் நகர் போல அலிகாரை குறிவைத்திருக்கிறது பாஜக. இது குறித்து முதல்வர், அமைச்சர் மற்றும் சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இப்படி ராஜா மகேந்திரரின் பிறந்த நாளை கொண்டாடியதெல்லாம் இதற்கு முன்பு இல்லை” என்கிறார்.
முன்னுதாரணம் இல்லை என்றாலும் அப்படி உருவாக்குவதுதான் சங்கபரிவாரத்தின் வேலை. மோடி ஆட்சியில் இது கூட செய்யாமலா இருப்பார்கள்?
இதற்கிடையில் அலிகார் பல்கலை நிர்வாகம் பாஜ்பாயின் ‘வரலாற்று’ கண்டுபிடிப்பை மறுத்திருக்கிறது. மொகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியின் ஒரு அறையை இந்த ராஜாவின் தந்தை ராஜா கான்ஷியம் சிங் கட்டியிருக்கிறார். மற்றபடி அந்த கல்லூரி இராணுவத்துக்கு பாத்தியப்பட்ட 74 ஏக்கரில் கட்டப்பட்டது. அதுவும் இந்த ராஜா மகேந்திரர் பிறப்பதற்கு முன்னாடி என்று நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.
மேலும் அலிகார் பல்கலைக்கு நன்கொடை அளித்த அனைவரது பெயரும் அங்கே கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. பாஜக கொண்டாடும் ராஜா இங்கே படித்த முன்னாள் மாணவர் என்பதைத் தாண்டி வேறு தொடர்பு இல்லை. அடுத்து மொகமதன் ஆங்கிலோ ஒரியண்டல் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு இந்த ராஜா 1977-ல் வந்திருக்கிறார்.
அவரும் கூட பிற்பாடு இந்தமதவெறிக் கூட்டம் தனது பெயரை வைத்து கலவரத்திற்கு அடிபோடுமென்பதை கற்பனை செய்திருக்க வாய்ப்பில்லை.
ராஜா மகேந்திர பிரதாப் சிங்
ராஜா மகேந்திர பிரதாப் சிங்
அலிகார் பல்கலையின் துணைவேந்தரும், ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலுமான சமீருதின் ஷா அறிக்கையை படியுங்கள். அதில் “ராஜா மகேந்திர பிரதாப்பின் பிறந்த நாளை பல்கலை வளாகத்தில் கொண்டாடுவதால், கலவரத்திற்கான பதட்டம் ஏற்படும், பல்வேறு பிரிவினர்கள், கட்சிகள் மோதும் சூழ்நிலை உருவாகும்” என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அலிகார் பல்கலை மாணவர் சங்கமும் இந்த கொண்டாட்டத்தை பல்கலை வளாகத்தில் ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. பல்கலை நிர்வாகம் நேரடியாக பாஜக பெயரை குறிப்பிடவில்லை. அப்படி அறிவிக்குமளவு இங்கே ஜனநாயகம் இல்லை.
தூணிலும், துரும்பிலும் பெருமாள் இருக்கிறானோ இல்லையோ சங்க பரிவாரத்தின் பார்ப்பனிய பாசிசம் தயாரித்திருக்கும் வரலாற்று மோசடிகள் ஏராளமிருக்கின்றன. அவை எங்கு எப்போது ரிலீசாகும் என்பது சங்க பரிவாரத்தின் ரவுடிப் படை தயாராகும் நேரத்தைப் பொறுத்தது.
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.
கண்டுகொள்ளாமல் விட்டால் வரலாற்றில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நாம் அடிமைகள்!

28 Nov 2014

ஈழத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டி உதவி செய்யும் காலம் வரும்: சீமான்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் ஈழ விடுதலைக்கு உதவிடும் காலம் வரும் என்று  தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழனின் வீரத்தையும் தியாகத்தையும் உலகிற்கு பறைசாற்றிய எம் மாவீரர்கள். தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை, கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து,
ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பெளத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன், இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த எம் மாவீரர்களை நன்றியுடனும், பெருமையுடனும் நினைவு கூறும் தினம் இன்று.

உலக வரலாறு இதுநாள் வரை சந்தித்திராத மாபெரும் தியாக தீபங்கள் நம் மாவீரர்களும், வீராங்கனைகளும். இலங்கை இன வெறி இராணுவத்திற்கு எதிராக படைத் திரட்டி போராடிய எம் இலட்சியத் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர், உலகத் தமிழினத்தின் பெருமை மிக அடையாளமாகத் திகழ்ந்த மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தமிழீழ இலட்சியத்தில் எந்த அளவிற்கு உறுதியாக நின்றாரோ, அதே உறுதியுடன், இம்மியளவும் பிசாகாமல், தன்னலம் பாராத போராளிகளாய் களமாடி உயிர்த் தியாகம் செய்தவர்கள் எம் மாவீரர்கள்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையுடன் கிடைத்த சர்வதேசத்தின் வலிமையான ஆதரவு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் நேர்முக, மறைமுக ஆயுத உதவிகள், ஆலோசனை, பயிற்சிகள் என்றெல்லாம் பன்முக வல்லமையுடன் படையெடுத்த இலங்கையின் முப்படைகளின் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு நின்று, பாரம்பரியமிக்க தமிழரின் வீரத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மானத்தை காத்தவர்கள் எம் மாவீரர்களும், வீராங்கனைகளுமாவர்.

வீரத்தாலும், தியாகத்தாலும் உருவாக்கப்படுவதுதான் சுதந்திரமே தவிர, அஞ்சி நடுங்கியோ அல்லது அடக்குமறையாளனிடம் யாசித்துப் பெறுவதோ அல்ல சுதந்திரம் என்பதை பறைசாற்றியவர்கள் விடுதலைப் புலிகள். தன்னைப் பற்றி, தன்னலம் பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் தம் வாழ்வை ஒப்புக்கொடுத்து வீரத்தை நிலைநாட்டியவர்கள் நம் புலிகள். பாலினத்தைச் சேர்ந்ததல்ல வீரம், நல்லியத உணர்வை சார்ந்ததே என்பதை களமிறங்கி உலகிற்கு மெய்ப்பித்தவர்கள் நம் வீராங்கனைகள். தமிழினத்தைச்  சிதைக்கும் நோக்குடன் போர் தொடுத்த சிங்கள இராணுவத்தை அழித்தொழிக்கும் போரில் ஈடுபட்டு அவர்களைச்  சிதறடித்தவர்கள் நம் கரும்புலி மாவீரர்கள்.

அரச பலத்தையும், ஆயுதங்களைக் கொண்டும் அநீதியை இழைத்த சிங்கள பெளத்த இனவெறி படையினரை வீரத்தை வெளிப்படுத்தி வீழ்த்தி மேன்மையைப்  படைத்தவர்கள் நம் மாவீரர்கள். எம் மாவீரர்களுக்கு ஆயுதம் துணையே அன்றி, இணை அல்ல. ஏனெனில் ஆயுதத்தை மட்டுமே நம்பி எம் வீரர்களும் வீராங்கனைகளும் களமாடவில்லை, மாறாக, வீரத்தையும், தியாகத்தையும் கவசங்களாகக் கொண்டு போரிட்டார்கள். உலகம் வியக்கும் வீர வரலாற்றைப் படைத்தார்கள்.

ஆனால், இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி, தடை செய்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலத் தெரியாதவர்கள், அதற்காக அந்நிய முதலீடுகளுக்கு நாட்டை அடமானம் வைப்பவர்கள், ஈழத் தமிழ் வீரர்களுக்கு  களங்கம் கற்பிக்க முயல்வது அவலமாகும். உலக நாடுகளின் கீழ்த்தரமான ஆட்சியாளர்கள் மேன்மையான வீரத்தினைப்  பழிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்பது ஈழத்தின் விடுதலையையே. இந்தக்  கூட்டணிக்குத்  தலைமையேற்று தமிழினத்தின் தோல்விக்கு முன்நின்றது இந்திய அரசு.

தமிழினத்தின் பாரம்பரியமிக்க வீரம் புறக்கணிக்கப்படுமானால், அது பிற நாடுகளால் இந்தியாவிற்குப்  பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். தொலைநோக்குப்  பார்வையின்றி ஈழத்திற்கு இந்தியா செய்த துரோகம், தனக்கே அது தேடிக்கொண்ட விரோதம் ஆகிவிட்டது. ஈழத் தமிழினத்திற்குச்  செய்த அந்த துரோகத்தை நீக்காமல், அந்த விரோதத்தை நீக்கிட முடியாது. இலங்கையின் ஆணவப் போக்கு ஆரம்பமாகியுள்ளது,  இது தொடரும், அதன் காரணமாக ஈழத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டி, ஆயுத உதவி செய்யும் காலம் வரும். அப்போதும் தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் தமிழீழம் பிறக்கும்.

தமிழீழ விடுதலைக்கு விதையாய் விழுந்த மாவீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது" என்று  கூறியுள்ளார்.

27 Nov 2014

'புலி'யூரில் நடந்த மாவீரர்கள் நாள் வீர வணக்கம்

 
 
விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி  என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...
 'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலிகளும் மக்கள் பிரச்சனையை என்றால் ஓடோடி வந்து உதவுவர்... எங்கள் குடும்ப உறுப்பினர் போல இருப்பார்கள். அவர்களை பொடியன்கள் என்று தான் அழைப்பார்கள்... மூர்த்தி சிறுசு ஆனா கீர்த்தி பெருசு என்பது போல அவர்கள் செயல்கள் தீரம் மிக்கதா இருக்கும்...அங்கே நாட்டுல நடந்த ஒரு சமரில் தளபதி பொன்னம்மான் வீர மரணம் அடைய அது எங்களால் தாங்க முடியவில்லை....அப்பொழுதே கிட்டத்தட்ட 5000 பேர்களுக்கு மேல் ஊர்வலமாக மேட்டூர் வரை சென்று எங்கள் வீர வணக்கம் செலுத்தினோம் அவரோட நினைவா இங்க அவருக்கு நினைவு மண்டபம் கட்டி, நவ 27 அன்று, அவர் உட்பட மாவீரர்கள் அனைவருக்கும் நாங்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் இங்க புலிகள் பயிற்சி செய்ததால புலிகள் ஊர் என சொல்லி சொல்லி மருவி புலியூர் என்றே பெயர் பெற்றுவிட்டது எங்கள் கிராமம்...அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு 'புலி'யூர் உள்ளதே என்று எங்களுக்கு பெருமையே' என்றார் தி.வி.க தோழர் சூர்யா பிரகாஷ்...மற்றும் அங்கு திரண்ட கருப்பு சட்டையினரும்...
 
வழக்கமாக மாவீரர் நாள் அன்று ஈழத்தில் மாலை 6.05 மணிக்கு பிரபாகரன் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்வார்  பின் உரையாற்றுவார் . 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் ஈழத்தில் மாவீரர்கள் தின உரையாற்றினார் அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் அவர் நவ 27 இல் உரையாற்றுவார் என ஈழ,சர்வதேச தமிழர்கள் எதிர்பார்பதை போல புலியூர் மக்களும் எதிர்பார்த்தே பொன்னம்மான் நினைவு மண்டபம் வந்தனர் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்... பல குழந்தைகள் பெண் சிறுமிகளே.......

'எங்க பிரபாகரன் மாமா சொல்லியிருக்காரு அதனால தான் நாங்க இங்க வர்றோம் அப்பா அம்மா கூட வந்துருக்கோமே...' என்றார் குட்டி பாப்பா யாழினி......

அதன் பின் அங்கே ஈழ பாடல்கள் ஒலிக்கப்பட ,நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள்  நடந்தது...
 புலியூரில் நடந்த மாவீரர்கள் தின வீர வணக்க நிகழ்வு வீரத்தை நெஞ்சில் விதைத்தது.....


செய்தி, படங்கள்:  இளங்கோவன் 

26 Nov 2014

நல்லகண்ணுக்கு எழாத குரல் ரஜினிக்கு ஏன்?

ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ரஜினி பட ரிலீஸை ஒட்டிஇப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்.
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, வேறு இரண்டு கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

* ரஜினி 'அரசியல்’ செய்யவேயில்லையா?

* ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு வயது கிட்டத்தட்ட 20 என்பதே, ரஜினி ‘அரசியல்’ செய்யவேயில்லையா என்ற கேள்விக்கான பதிலாக உள்ளது. 20 ஆண்டுகளாக, இந்தக் கேள்விக்குப் பதிலே சொல்லாமல், அல்லது குழப்பமான பதில்களைச் சொல்லியே, தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அதிலும் ரஜினியின் புதுப்பட ரிலீஸ்களை ஒட்டி இந்தக் கேள்வி எழுவது ரஜினி செய்யும் ‘அரசியல்’தான். மற்ற எந்த அரசியல்வாதிகளையும்விட இந்த விஷயத்தில் ரஜினி திறமையான அரசியல்வாதிதான்.

சரி... ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய அவசியம் என்ன? ரஜினி வந்துதான் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? இதற்கு இரண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன.

* எல்லாக் கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். கறைபடிந்துபோன அரசியல் சூழலில் ரஜினியால்தான் நல்லாட்சியைத் தரமுடியும்.

* இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் சிலவற்றைப் பட்டியலிடுவோம். ஊழல்மயமாகிப் போன அரசியல், குடும்ப அரசியல், 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று அரசியல் சட்டம் சொன்னாலும் நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னமும் தீண்டாமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் கௌரவக் கொலை செய்யப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சிறு வணிகங்கள் அழிகின்றன. இயற்கை வளங்கள் பெரும் பணக்காரர்களால், பெருமுதலாளிகளால், பெரு நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றன. மின்வெட்டு போன்ற பிரச்னைகளின் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகள் இருக்கின்றன, அரசியல் ரவுடியியல் ஆகி இருக்கிறது.

எந்தப் பாகுபாடுமின்றி எல்லாக் கட்சிகளிலும் கிரிமினல்கள் நிரம்பி வழிகிறார்கள். பெண்கள் என்னதான் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறியிருந்தாலும் சுயமாக முடிவெடுப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒருபுறம் பண்பாட்டுப் பெருமை பேசிக்கொண்டே சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சமூகநீதி பூமியான தமிழகத்தில் இன்னமும் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் முடியவில்லை. இன்னொருபுறம் இட ஒதுக்கீட்டுக்கே வாய்ப்பற்ற தனியார்மயம், தமிழகத்தின் தீர்க்கமுடியாத பிரச்னையான நதிநீர்ப் பிரச்னை, தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஈழப் பிரச்னை, கல்வியும் மருத்துவமும் வியாபாரமாகிப் போன அவலம்... இப்படிப் பல பிரச்னைகளைப் பட்டியலிடலாம்.
இதில் எல்லாம் ரஜினிக்கு என்று ஏதாவது கருத்து இருக்கிறதா? இருந்தாலும் அவற்றை அவர் பொதுவெளியில் பதிவு செய்திருக்கிறாரா? எந்தப் பிரச்னையை ரஜினியால் தீர்க்கமுடியும்? அவரால்தான் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்பதற்கான ஆதாரம் என்ன? மற்ற அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களைவிட தனித்துவமான செயல்திட்டம் எதுவும் அவரிடம் இருக்கிறதா? எல்லாவற்றுக்கும் ‘இல்லை’ என்பதுதான் பதில். ஒரு தனிமனிதனுக்கு சமூகத்தின் அத்தனை பிரச்னைகள் குறித்தும் கருத்து இருக்க வேண்டுமென்றோ அதைப் பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால், முதலில் அவருக்கு இங்கே இருக்கிற பிரச்னைகள் குறித்த புரிதலும் பார்வையும் அவசியம்.

அப்படியானால் ரஜினி பொதுப்பிரச்னைகள் பற்றிப் பேசியதே இல்லையா? உண்டு. மணிரத்னம் வீட்டில் குண்டு வீசப்பட்டபோது, ‘பாட்ஷா’ பட விழாவில் “தமிழகத்தில் வன்முறைக் கலாசாரம் அதிகரித்துவிட்டது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அன்றைய ஜெயலலிதா அரசாங்கம் ரஜினிகாந்துக்குத் தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுத்தன. அதைத் தொடர்ந்துவந்த தேர்தலின்போது, தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த ரஜினி, “இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்றார். பிறகு அவரே ஒரு தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து ‘வாய்ஸ்’ கொடுத்தார். ஆனால் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தோல்வியடைந்தது. 'கருணாநிதிக்காக நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சினிமாக்காரர்களை மிரட்டி அழைத்துவருகிறார்கள்' என்று அஜித் மேடையில் சொன்னார். கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினி, எழுந்து நின்று கைதட்டி, அதை ஆமோதித்தார்.

காவிரிப் பிரச்னையை ஒட்டி நடந்த நடிகர்கள் உண்ணாவிரதத்தில் 'தண்ணி தராதவங்களை ஓட ஓட விரட்டணும்' என்று ஆவேசக்குரல் கொடுத்தார். கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்பு கேட்டார். ஆகமொத்தம், இருபதாண்டு காலத்தில் ரஜினியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடுகள்  இவைதான்.  இந்தப் பிரச்னைகளையும்  கவனித்துப் பார்த்தால், ஏதோ ஒருவகையில் அவை சினிமா தொடர்புடைய பிரச்னையாக இருக்கும். ஒரு துறை சார்ந்தவர், தன் துறை சார்ந்தவரின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் நாளை ரஜினி அரசியலில் குதித்து, முதல்வராகவும் ஆனால் அவர் சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வர் இல்லை. மக்களுக்கான முதல்வர். அப்படியானால் மக்களின் பிரச்னைகள் குறித்து அவர் பேசியாக வேண்டும். ஆனால் இதுவரை ரஜினி அப்படிப் பேசியதில்லை என்பதுதான் நிஜம்.

மேலும் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. மக்களுக்காக உழைப்பவர்கள் எல்லாம் மக்களால் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்படுவதும் இல்லை. தமிழர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தந்தை பெரியார், தேர்தல் அரசியலுக்கு வரவேயில்லை. தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் வாய்ப்புகளையும் புறக்கணித்தார். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் குறித்த பரப்புரைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த நம்மாழ்வார் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பணிகள் நீண்டகால நோக்குடையவை.

சுதந்திரப் போராட்டம், சாதியப் பிரச்னைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி சமகாலப் பிரச்னையான மணல் கொள்ளை எதிர்ப்பு வரை தொடர்ச்சியாகப் போராடிவருபவர் நல்லகண்ணு. தேர்தல் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் எந்த மக்களுக்காகப் போராடுகிறாரோ அந்த மக்களாலேயே தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்படுகிறார் நல்லகண்ணு இந்த மக்களுக்காகச் செய்யாத எந்த ஒன்றை, ரஜினி அரசியலுக்கு வந்து செய்யப்போகிறார்? ‘நல்லகண்ணு வெற்றிபெற வேண்டும்’ என்று குரல்கள் எழாதபோது, ‘ரஜினி முதல்வராக வேண்டும்’ என்று குரல்கள் எழுவதன் அவசியம் என்ன?

இரண்டாவதாக, 'இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இந்த ‘ஏதாவது’ என்றால் என்ன? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், அவர் ரசிகர்கள் கவுன்சிலர்கள் தொடங்கி அமைச்சர்கள் பதவிகள் வரை அமர வேண்டும், அதிகாரிகளின் மரியாதையுடன் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும்.  இதுதானே அந்த ‘ஏதாவது’. யாராவது ‘மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வருவேன்’ என்று சொன்னால் அதை மக்களே நம்பமாட்டார்கள். ஆக ரசிகர்கள் பதவிகளில் அமரவும், பணம் சம்பாதிக்கவும்தான் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அது ஓர் ஊழல்வாதம்தானே. ‘இவ்வளவுநாள் மற்றவர்கள் கொள்ளையடித்தார்கள். இனி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்பது நீதியானதுதானா?

சரி...இப்போது ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தாலும் அவரால் வெற்றிபெற முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம்.

ரஜினிக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரஜினியின் தீவிர ரசிகர்களில் பெரும்பாலோர் நாற்பதைக் கடந்தவர்கள்; ஐம்பதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள். ரஜினிக்கு வயதாகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்களுக்கும் வயதாகியிருக்கிறது என்பது உண்மை. இன்றைய அரசியல் சூழல், புதிய வாக்காளர்களாக உருவாகியிருக்கும் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு - இவற்றையெல்லாம் ரஜினியாலோ அவரது ரசிகர்களாலோ எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ரஜினியைப் போல பலகாலம் இழுத்தடிக்காமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். தொடக்க காலத்தில் மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்க்கப்பட்ட விஜயகாந்த், இன்று கேலிக்குரியவராகப் பார்க்கப்படுகிறார். யூடியூபில் ‘விஜயகாந்த்’ என்று டைப் செய்தால், நூற்றுக்கணக்கான காமெடி வீடியோக்கள் கொட்டுகின்றன. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாரே தவிர, மேலே சொன்ன தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் குறித்து அவருக்குக் கருத்தோ தீர்வோ எதுவும் கிடையாது. விஜயகாந்தைவிட இந்த விஷயத்தில் ரஜினி சிறந்தவர் என்று சொல்வதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவை எடுத்துக்கொள்வோம். இங்கே ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், அங்கே சிரஞ்சீவி மெகா ஸ்டார். ஆனால் அவரால் அரசியலில் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை.  இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாதா என்ன? விஜயகாந்தையும் சிரஞ்சீவியையும் பார்த்தபிறகும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் அவர் ரசிகர்கள் நம்பினால், மற்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள், ரஜினி தன் ரசிகர்களையே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம்.

மேலும் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் எல்லாம் மிகச்சிறந்த நடிகனாக ரஜினி தன்னை நிரூபித்திருந்தாலும் வெற்றிகரமான ரஜினி என்பது ‘பாட்ஷா’ ரஜினியும் ‘படையப்பா’ ரஜினியும்தான். வணிகச்சூழலுக்கு ஏற்றவாறு தன் பிம்பத்தை நிறுவிக்கொண்டவர் ரஜினி. அவ்வப்போது சில ரிஸ்க்குகளையும் அவர் எடுத்திருக்கிறார்தான். அவரின் நூறாவது படமான ‘ராகவேந்திரா’வில் வழக்கமான ஆக்‌ஷன் ரஜினிக்குப் பதிலாக அடக்கமான பக்தி ரஜினியை முன்னிறுத்தினார். குறை சொல்ல முடியாத நடிப்பு என்றாலும் படம் ஓடவில்லை. சரியாகவோ அசட்டுத்தனமாகவோ, தான் ஆன்மிகம் என்று நம்பும் ஒன்றை ‘பாபா’ படமாக எடுத்தார். அதுவும் தோல்வி. 'குசேலன்’ படத்தில் சுந்தர்ராஜனை வைத்து காரசாரமான கேள்விகளைக் கேட்கவைத்தார். அதற்குச் சொதப்பலான பதிலும் அளித்தார். ஆனால் மோசமான பட உருவாக்கத்தால் ‘குசேலன்’ படுதோல்வி. இப்படி சினிமாவில் ரஜினி எடுத்த ரிஸ்க்குகள் எல்லாமே தோல்விகளில்தான் முடிந்தன.

இதைத் தவிர எப்போதும் சினிமாவில் ரஜினி ரிஸ்க் எடுக்க விரும்பியதில்லை. சினிமாவிலேயே ரிஸ்க் எடுக்காத, எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத ரஜினி, அரசியல் என்ற மாபெரும் ரிஸ்க்கை எப்படி எடுப்பார்?

தமிழர்கள் சார்பாக ரஜினியிடம் வைப்பதற்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் இருக்கிறது. ‘ஒன்று அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன் என்று அறிவியுங்கள் அல்லது அப்படியான எண்ணமே இல்லை என்று தெரிவியுங்கள். பன்ச் டயலாக்குகளைப் படத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்’. சுருக்கமாகச் சொன்னால் ரஜினி அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்!’

ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு


திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்துக் கொண்டிருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ளனர். முடக்கி போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப்படையை பார்த்து வளர்ந்தது நாம் தமிழர் படை.

ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே நம் விடுதலைக்கு எதிராக இருக்கும் பொது, இவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி நாம் வலுவாக வேண்டும். படையை பெருக்கி மக்களை திரட்டி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பிரபாகரனுக்கு இங்கே ஏன் விழா கொண்டாடுகிறீர்கள், பிரபாகரனை எதற்காக இங்கு தலைவர் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவராகும் போது, தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரன் தலைவராக கூடாதா?

சோனியா அன்னையாகலாம், நேரு மாமாவாகலாம், என் மொழிக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாக கூடாதா? அண்ணன் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

முதல்–அமைச்சர் பதவியை பிடிப்பதற்காகவா கட்சி ஆரம்பித்து உள்ளீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். பிறகு முச்சந்தியில கத்தி கிட்டு சாகவா கட்சி ஆரம் பிச்சுருக்கோம். ஆமாம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி ஆரம்பிச்சுருக்கோம். உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே மாற்று. நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் கைப்பற்றுவோம். அதுவரை காத்திருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு.

சீமான் முதல்–அமைச்சர் ஆகிறானா, இல்லையா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆள்கிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.

ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது?

தமிழ் மண்ணிற்காக, மொழிக்காக, இயற்கையை காப்பதற்காக, இந்த மக்களுக்காக தன் ஆயுளையே அற்பணித்த பலர் இந்த மண்ணில் இருக்கும் போது, ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதற்கும் ஆதரவு கொடுக்கவும் சிலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால், இந்த தமிழ் சமூகம் எதை நோக்கி போகின்றது.

மக்களுக்காக எதாவது ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக நின்றிருக்கிறாரா? வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். போட்டு பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா? என்று.

2016 தேர்தலில் தனித்து நிற்கபோகிறீர்களா, கூட்டணி வைக்க போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே 2016 தேர்தலில் தனித்து நிற்க போகிறோம் என்றுதான் நாம் சொல்லி வருகிறோம்.

அனைத்து தொகுதியிலும் நாம் தனித்துதான் நிற்க போறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக் கட்சியாக, நம் கட்சியை எடுத்து செல்ல வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள தயாராக இருப்போம்
.
வாழ்வோ, சாவோ நாம் தனித்துதான் நிற்க போகிறோம். எவருக்கு கீழும் நாங்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம். தேர்தல் அரசியல் என்பது நெடுந்தூர பயணம். நாம் தேர்தலில் நிற்காதவரை அன்றைய சூழலுக்கு ஏற்ப சில கட்சிகளை ஆதரித்திருக்கலாம். ஆனால் நாங்கள் களத்திற்கு வரும்போது தனித்து தான், தேவையென்றால் எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வரவிரும்புபவர்கள் வரலாம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தடா சந்திரசேகர், கலைகோட்டுதயம், அன்புத் தென்னரசன், பாலமுரளிவர்மன், அறிவுச் செல்வன், அமுதா நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று மாவீரர் நாள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தேனாம்பாள் திருமண அரங்கில் சீமான் தலைமையில் நடக்கிறது.

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ரத்ததான முகாமில் 5,250 பேர் வரை ரத்ததானம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் பெருவளத்தான், செவேல்வானவரம்பன், செந்தமிழ்செல்வன், பாலசுப்பிமணியம், வெற்றிச் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

25 Nov 2014

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும்: சீமான்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத் தளபதி பிரபாகரனின் பிறந்த நாளை பொது நிகழ்ச்சியாக கொண்டாடவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டதில் பல இடங்களில் காவல் துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
இது, இந்திய அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசமைப்பு எமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையில், தமிழக முதலமைச்சர் தலையிட்டு, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஈழத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டி உதவி செய்யும் காலம் வரும்: சீமான் அறிக்கை!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவும் ஈழ விடுதலைக்கு உதவிடும் காலம் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழனின் வீரத்தையும் தியாகத்தையும் உலகிற்கு பறைசாற்றிய எம் மாவீரர்கள். தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை, கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து, ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பெளத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன், இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த எம் மாவீரர்களை நன்றியுடனும், பெருமையுடனும் நினைவு கூறும் தினம் இன்று.
உலக வரலாறு இதுநாள் வரை சந்தித்திராத மாபெரும் தியாக தீபங்கள் நம் மாவீரர்களும், வீராங்கனைகளும். இலங்கை இன வெறி இராணுவத்திற்கு எதிராக படைத் திரட்டி போராடிய எம் இலட்சியத் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர், உலகத் தமிழினத்தின் பெருமை மிக அடையாளமாகத் திகழ்ந்த மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தமிழீழ இலட்சியத்தில் எந்த அளவிற்கு உறுதியாக நின்றாரோ, அதே உறுதியுடன், இம்மியளவும் பிசாகாமல், தன்னலம் பாராத போராளிகளாய் களமாடி உயிர்த் தியாகம் செய்தவர்கள் எம் மாவீரர்கள்.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையுடன் கிடைத்த சர்வதேசத்தின் வலிமையான ஆதரவு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் நேர்முக, மறைமுக ஆயுத உதவிகள், ஆலோசனை, பயிற்சிகள் என்றெல்லாம் பன்முக வல்லமையுடன் படையெடுத்த இலங்கையின் முப்படைகளின் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு நின்று, பாரம்பரியமிக்க தமிழரின் வீரத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மானத்தை காத்தவர்கள் எம் மாவீரர்களும், வீராங்கனைகளுமாவர்.
வீரத்தாலும், தியாகத்தாலும் உருவாக்கப்படுவதுதான் சுதந்திரமே தவிர, அஞ்சி நடுங்கியோ அல்லது அடக்குமறையாளனிடம் யாசித்துப் பெறுவதோ அல்ல சுதந்திரம் என்பதை பறைசாற்றியவர்கள் விடுதலைப் புலிகள். தன்னைப் பற்றி, தன்னலம் பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் தம் வாழ்வை ஒப்புக்கொடுத்து வீரத்தை நிலைநாட்டியவர்கள் நம் புலிகள்.
பாலினத்தைச் சேர்ந்ததல்ல வீரம், நல்லியத உணர்வை சார்ந்ததே என்பதை களமிறங்கி உலகிற்கு மெய்ப்பித்தவர்கள் நம் வீராங்கனைகள். தமிழினத்தைச்  சிதைக்கும் நோக்குடன் போர் தொடுத்த சிங்கள இராணுவத்தை அழித்தொழிக்கும் போரில் ஈடுபட்டு அவர்களைச்  சிதறடித்தவர்கள் நம் கரும்புலி மாவீரர்கள்.
அரச பலத்தையும், ஆயுதங்களைக் கொண்டும் அநீதியை இழைத்த சிங்கள பெளத்த இனவெறி படையினரை வீரத்தை வெளிப்படுத்தி வீழ்த்தி மேன்மையைப்  படைத்தவர்கள் நம் மாவீரர்கள். எம் மாவீரர்களுக்கு ஆயுதம் துணையே அன்றி, இணை அல்ல. ஏனெனில் ஆயுதத்தை மட்டுமே நம்பி எம் வீரர்களும் வீராங்கனைகளும் களமாடவில்லை, மாறாக, வீரத்தையும், தியாகத்தையும் கவசங்களாகக் கொண்டு போரிட்டார்கள். உலகம் வியக்கும் வீர வரலாற்றைப் படைத்தார்கள்.
ஆனால், இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி, தடை செய்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலத் தெரியாதவர்கள், அதற்காக அந்நிய முதலீடுகளுக்கு நாட்டை அடமானம் வைப்பவர்கள், ஈழத் தமிழ் வீரர்களுக்கு  களங்கம் கற்பிக்க முயல்வது அவலமாகும். உலக நாடுகளின் கீழ்த்தரமான ஆட்சியாளர்கள் மேன்மையான வீரத்தினைப்  பழிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்பது ஈழத்தின் விடுதலையையே. இந்தக்  கூட்டணிக்குத்  தலைமையேற்று தமிழினத்தின் தோல்விக்கு முன்நின்றது இந்திய அரசு.
தமிழினத்தின் பாரம்பரியமிக்க வீரம் புறக்கணிக்கப்படுமானால், அது பிற நாடுகளால் இந்தியாவிற்குப்  பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். தொலைநோக்குப்  பார்வையின்றி ஈழத்திற்கு இந்தியா செய்த துரோகம், தனக்கே அது தேடிக்கொண்ட விரோதம் ஆகிவிட்டது. ஈழத் தமிழினத்திற்குச்  செய்த அந்த துரோகத்தை நீக்காமல், அந்த விரோதத்தை நீக்கிட முடியாது. இலங்கையின் ஆணவப் போக்கு ஆரம்பமாகியுள்ளது,  இது தொடரும், அதன் காரணமாக ஈழத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டி, ஆயுத உதவி செய்யும் காலம் வரும். அப்போதும் தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் தமிழீழம் பிறக்கும்.
தமிழீழ விடுதலைக்கு விதையாய் விழுந்த மாவீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும் - சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
’’தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத் தளபதியும், தமிழ் இன மக்களின் மேன்மைமிகு அடையாளமாகவும் திகழ்கின்ற மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை பொது நிகழ்ச்சியாக கொண்டாடவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டதில் பல இடங்களில் காவல் துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. இது இந்திய அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
 
ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்திருக்கிறது என்றாலும், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவதும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள் நடத்துவதும் எந்த விதத்திலும் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் வைகோ உள்ளிட்டோர் வழக்கில் தெட்டத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

 இந்த நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கும், மாவீரர் தினத்தை பொது நிகழ்வாக கொண்டாடுவதற்கும் தமிழக காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது. எதற்காக கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறீர்கள் என்று கேட்டால், எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்றும், இன்னும் சில இடங்களில், அனுமதி அளிக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளது என்றும் காவல் துறையினர் பதில் கூறுகின்றனர். காவல் துறையின் இந்த கூற்று, அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
 
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு என்ற இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் செய்ய சென்ற நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து விண்ணப்பத்தை பெறுவதற்கு காவல் துறை அதிகாரி மறுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவீரர் தினத்தையொட்டி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றுமாறு காவல் துறையினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

பாரதிய ஜனதா கட்சியின் தேச செயலாளர் எச். ராஜா காவல் நிலையத்திற்கே வந்து காவல் அதிகாரிகளை மிரட்டி, பதாகைகளை அகற்றச் சொல்கிறார். இது சட்டத்திற்கு புறம்பான, அராஜக நடவடிக்கையாகும். மத்தியில் ஆட்சி செய்வது பா.ஜ.க. என்கிற ஆணவத்தில் எச். ராஜா இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இப்படித்தான் நடந்து கொண்டார்கள், அதற்கு நாம் தமிழர் கட்சி 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும், இந்த ஆண்டு நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்து, அக்கட்சியை வீழ்த்திக் காட்டினோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் 4 கட்சிகளின் துணையுடன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 75 இலட்சம் வாங்கிவிட்ட ஆணவத்தில் பா.ஜ.க. வினர் இப்படிப்பட்ட கீ்ழ்த்தரமான செயலில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு பா.ஜ.க.வினரின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கைகள் தொடருமானால், அவர்களும் காங்கிரஸ் கட்சி சந்தித்த அதே முடிவை சந்திப்பார்கள், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டது போல் பா.ஜ.க.வும் துடைத்தெறியப்படும் என்பதை எச்சிரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இந்திய அரசமைப்பு எமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.’’

பள்ளி ஆசிரியை திடீர் சாவு விஷ காய்ச்சலால் இறந்தாரா? மருத்துவ குழுவினர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தொண்டமான்துறையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், கோபாலகிருஷ்ணனின் மனைவியுமான சோபியா (வயது 34) என்பவரும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோபியா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் சோபியா பரிதாபமாக இறந்தார். சோபியாவின் கணவர் கோபாலகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சோபியா இறந்தாரா? என பெரம்பலூர் மாவட்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

24 Nov 2014

தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள்...

23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர்.இரா.வினோபா தலைமை தாங்கினார். தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 இளந்தமிழர்கள் குருதிக்கொடை அளிப்பார்கள் என முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால் குருதி அளிக்க இளைஞர் கூட்டம் திரண்டு வந்ததால் செஞ்சிலுவை சங்கத்தினரால் குறிப்பிட்ட அளவை காட்டிலும் இருமடங்கு குருதி சேகரிக்கப்பட்டது. குருதி அளிக்கும் நிகழ்வினை கும்பகோணம் சுருதி மருத்துவ மைய நிறுவனர்.மருத்துவர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். தேசியத்தலைவரின் பிறந்தநாள் கேக்கினை நாம் தமிழர் குடும்பத்தின் இளம் தளிர்கள் வெட்டி கொண்டாடினார்கள். மாவீரர் நாள் உரையை மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில்,பொறியாளர்.துருவன் செல்வமணி,சோழ மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை ஆகியோர் ஆற்றினார்கள். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை கல்வியாளர்.குமாயுன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவாரூர்,தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள் . இந்நிகழ்வினை தஞ்சை கிழக்கு மாவட்ட நகர,ஒன்றிய,அனைத்துப்பாசறையை சார்ந்த நாம் தமிழர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். திரளான இளைஞர் கூட்டம் நிகழ்வினில் பங்கேற்றனர்.





 

 தலைமை  :  தஞ்சை கிழக்கு மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர்.இரா.வினோபா                இடம்             :   ஆர்.கே.ஜி திருமண மண்டபம்                                                                                                                                           

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு டிசம்பர் 5 வரை காவல்!

      இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரையும் டிசம்பர் 5 ஆம் தேதி            வரை சிறை வைக்க ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் (22 ஆம் தேதி) 669 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அன்று இரவு மீன் பிடித்துவிட்டு நேற்று காலை அனைத்து படகுகளும் கரை திரும்பி கொண்டிருந்தன. அப்போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புசேகர் என்பவரது படகு பழுதடைந்தது. படகில் இருந்த மீனவர்கள் தல்வின்ராஜ், டான்போஸ்கோ, களஞ்சியம், சரவணன் ஆகியோர் பழுதை சரி செய்ய முயன்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பழுதடைந்த படகுடன் 4 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
இதே போல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்துள்ளது. இதனால், கரை திரும்பாத அந்த படனை தேடி மாற்றுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் சென்றுள்ளனர். பழுதான படகினையும் அதில் இருந்த மீனவர்கள் 5 பேரையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர், மாற்றுப்படகில் தேடி வந்த 5 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களும் விசாரணைக்கு பின் ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 14 பேரையும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிறை வைக்குமாறு நீதிபதி சபேசன் உத்தரவிட்டார். இதையடுத்து, 12 மீனவர்கள் யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற இரு மீனவர்களும் சிறு வயதினர் என்பதால் சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 24 பேர் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 14 மீனவர்கள் சிறை பிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ரோட்டரிசங்க கருத்தரங்கில் சீமான் பங்கேற்பு....

மதுரையில் ரோட்டரிசங்க கருத்தரங்கில் சீமான் பங்கேற்பு ...

மதுரையில் நேற்று 23.11.14 அன்று மாலை நடந்த ரோட்டரி கருத்தரங்கில் தலைமைப்பண்பு குறித்து செந்தமிழன் சீமான் அவர்கள் உரையாற்றினார்.


.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்